உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தில் என்ன பேசப் போகிறார்கள் தெரியுமா.?

0
full

1930-ம் ஆண்டுகளில் உலகம் சந்தித்த பொருளாதார பெரும் சீரழிவு போன்ற சீரழிவை 2020-ம் ஆண்டில் எதிர்கொண்டு வருகிறோம். வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு இது பெரும் சரிவு தான். தீவிர வறுமையில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த விவகாரத்தைத் தான் விவாதிக்க இருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பொருளாதார திட்டங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளோம். அமைப்புசாரா தொழிலில் பணியில் உள்ளவர்கள் வேலையிழந்துள்ளனர். இவர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையே நம்பியிருக்கின்றனர்.

half 2

ஆனால் ஏழை நாடுகளில் வேலையும் இல்லை. வருவாயும் இல்லை, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடமிருந்து வரும் வருவாயும் இந்த நாடுகளுக்கு இல்லை. எனவே இவர்களின் சமூகப் பாதுகாப்புக்காக உலக வங்கி கூடுதல் உதவி வழங்க விரும்புகிறது.

poster

மக்கள் ஆரோக்கியம், கல்வி, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், நிதி ஒதுக்குவதில் முன்னுரிமையாகக் கொள்ளும் நாடுகளை உலக வங்கி வரவேற்கிறது.மக்களின் சுகாதாரம், உயிர், பாதுகாப்பிற்கே முன்னுரிமை வழங்குகிறோம். நாடுகள் தங்கள் பொருளாதாரங்களில் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிப்பது அவசியம்.

இதன் மூலம் தான் மக்கள் புதிய வேலைகளுக்கும் இடங்களுக்கும் செல்ல முடியும். கொரோனா தொற்றுக்கு முந்தைய பொருளாதாரம் இருக்காது என்பதால் நாடுகள் தங்கள் முக்கிய தொழில்துறைகளைப் பாதுகாப்பது அவசியம். மக்களுக்கு நேரடி பணஉதவிதிட்டத்தையும் ஊக்குவித்து வருகிறோம்.
– உலக வங்கித் தலைவர் மல்பாஸ்

half 1

Leave A Reply

Your email address will not be published.