திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி:

0
Full Page

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி:

Half page

திருச்சி அரியமங்கமலம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் (28), இவர் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவரிடம் விபாயபார ரீதியாக அறிமுகம் ஏற்பட்டது.  மைக்கேல் தனது நண்பரும் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளதாக கூறி மத்தியபிரதேசம் குர்கான் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவரை நிரஞ்சனுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மைக்கேலும், பிரசாந்த் இருவரும் சேர்ந்து  வெனிசுலாவுக்கு நிரஞ்சன் பெயரில் அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி போலி ஆவணங்கள் மற்றும் வீடியோக்களை தயாரித்து நிரஞ்சனிடம் இருந்து ரூ.2 கோடி பணத்தை பெற்றுள்ளனர். நிரஞ்சன் வியாபார ரீதியாக விசாரித்த போது வெனிசுலா நாட்டில் அரிசி தேவை என எவ்வித அறிவிப்பும் இல்லை என தகவல் கிடைத்தது.  இதுகுறித்து நிரஞ்சன் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக்கேல். பிரசாந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.