நீர்பாசனத்திற்காக நரிக்குறவர்கள் கலெக்டரிடம் மனு:

0

நீர்பாசனத்திற்காக நரிக்குறவர்கள் கலெக்டரிடம் மனு:

திருச்சி தேவராயநேரி. பகுதியில் வசிக்கும்  நரிக்குறவர் இன மக்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏரி பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்காததால்  கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு  காரில் புறப்பட்டு வெளியே வந்தபோது அவரது காரை மறித்து முற்றுகையிட்டு மனு அளித்தனர்..

சந்தா 2

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :  1966ல் திருச்சி மாவட்ட ஆட்சியராக மலையப்பன் இருந்தபோது எங்களுக்கு தேவராயநேரி ஏரியில் விவசாயம் செய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு அரை ஏக்கர், என நிலம் ஒதுக்கினார். அந்த நிலங்களில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு வழங்கிய நிலத்திற்கு நீர்பாசன வசதி கிடையாது. தஞ்சை,புதுக்குடி கிராமங்களில்  இருந்து வரும் உபரிநீரை வைத்தே விவசாயம் செய்து வருகிறோம்.  இந்நிலையில் உபரி நீரையும் வரவிடாமல் தேவராயநேரி மக்கள் உபரிநீரை குளத்துக்கு திருப்பி விட்டுள்ளனர். இதனால் நேரில் ஆய்வு செய்து தாங்கள் விவசாயம் செய்ய தேவையான நீர் கிடைக்க வழி வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

‌சந்தா 1

இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவதாக கலெக்டர் சிவராசு உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.