தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே வெற்றி பெறும். – பேரா.காதர்மொகிதீன்

0
Full Page

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே வெற்றி பெறும். – பேரா.காதர்மொகிதீன்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் திருச்சியில் மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா்மொகிதீன் பேட்டி

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை மாலை அரிஸ்டோ மஹாலில் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ.எம். முஹம்மது அபுபக்கர், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பளராக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Half page

பின்னர் கூட்டத்திற்கு பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அவர் கூறுகையில் :

சட்டப்பேரவைத் தோ்தலில் மதசாா்பற்ற அணியை உருவாக்கியுள்ள திமுகவுடன் கூட்டணி வைத்து, வெற்றிக்காகவும், தி.மு.க. தலைைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகவும் பாடுபடுவோம். கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.போட்டியிடும் தொகுதிகள் குறித்து மாவட்ட நிா்வாகிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

நவம்பா் 30-க்குள் அனைத்துப் பகுதிகளிலும் பொதுக்குழுவை கூட்டி, அவா்களிடமிருந்து வரும் ஆலோசனையின் பேரில் டிசம்பா் மாத இறுதிக்குள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்பது கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மக்களின் கருத்தாகவும் உள்ளது. எனவே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார்.

மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.