திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:

0
full

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:

half 2

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குதல், பென்சன் வழங்குதல், உள்ளூர் மாவட்ட வட்டார பணிமாறுதல் வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.  தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிஐடியூ ரங்கராஜன், மாநில துணைத்தலைவர் பெரியசாமி, பொருளாளர் தேவமணி உள்பட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.