சாலையின் நடுவே போல்டுகள் ; வாகனத்தின் டயரை சேதப்படுத்தும் அபாயம்

0
Business trichy

சாலையின் நடுவே போல்டுகள் ; வாகனத்தின் டயரை சேதப்படுத்தும் அபாயம்

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சோதனை முறையில் தமிழகத்திலேயே முதன்முறையாக இருசக்கர வாகனங்களுக்கென்று திருச்சி தலைமை தபால் நிலையம் பகுதியில் இருந்து எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா வரை பாரதிதாசன் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில்
தார்சாலை மையப்பகுதியை ஒட்டி மஞ்சள் நிறகோடு போட்டு தனிவழி
அமைக்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அடி உயரத்திற்கு ஒளிரும் சிவப்பு வண்ண பிளாஸ்டிக் அமைத்திருந்தனர்.

Full Page

இருசக்கர வாகன வழித்தடம் சாலையோரம் இருக்கும் காரணத்தினால் வணிக வளாகம் செல்வோர் அனைவரும் இருசக்கர வழித்தட பாதையிலேயே மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். அதுமட்டுமின்றி இருசக்கர வாகன வழியில் நான்கு சக்கர வாகனம் செல்லும்போது வாகனத்தை முந்திச் செல்லும் பொழுது அடையாள அறிவிப்புக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் அனைத்தும் சேதமடைந்து விட்டன.
தற்போது ஆணிகள் மட்டுமே சாலைகளில் காணப்படுகின்றன .

இது குறித்து வாகன ஓட்டுனர் ஒருவர் கூறுகையில், இருசக்கர வாகனங்களில் செல்வோர், அவசர வேலையாக வேகமாக செல்லும் போது சாலையின் நடுவிலேயே இருந்த ஒளிரும் பிளாஸ்டிக் கட்டமைப்பில் மோதி உடைந்து சாலையோரமாக கிடைக்கிறது.
இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு தனி வழித்தடம் அமைப்பது வரவேற்கக் கூடியது பிற வாகனங்கள் அந்த வழித்தடத்தில் நிற்கவும் கூடாது என்றார்.

Half page

Leave A Reply

Your email address will not be published.