தற்காலிக மேல் கூரை அமைக்க கோரி தரைக்கடை வியாபாரிகள் கலெக்டரிடமும் காவல் ஆணையரிடம் மனு !

0
full

தற்காலிக மேல் கூரை அமைக்க கோரி தரைக்கடை வியாபாரிகள் கலெக்டரிடமும் காவல் ஆணையரிடம் மனு !

திருச்சி மாவட்டம் என்எஸ்க் ரோடு, தெப்பக்குளம், நந்தி கோயில் தெரு பகுதிகளில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் மழை மற்றும் வெயில்களை சமாளிக்க மேலே ரெக்சின் கட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் கோட்டைக் காவல் துறையினர் தற்பொழுது மேலே ரெக்ஸின் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

poster
half 2

இந்நிலையில் AITUC தரைக்கடை வியாபாரிகள் இந்த வருடம் முற்றிலுமாக வியாபாரம் இல்லாத நிலையில் தற்போது தான் தீபாவளி வியாபாரத்திற்கு தயாராகி வருகிறோம். நிலையில் மேலே ரேக்ஸின் கட்ட வேண்டாம் என்று சொல்லி இருப்பது. எங்கள் பொருளாதாரத்தை முற்றிலும் நசுக்கி விடும். வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விடும்.

 

எனவே மேலே ரெக்ஸின் கட்ட அனுமதி வழங்க வலியுறுத்தி தரைக்கடை வியாபாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரையும் மற்றும் மாவட்ட காவல் ஆணையரையும் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.