திருச்சி மாவட்டத்தில் நேற்று (18.10.2020) புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

திருச்சி மாவட்டத்தில் நேற்று (18.10.2020) புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

திருச்சியில் நேற்று (18.10.2020) புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,850 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் நேற்று குணமடைந்த 25 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,059 ஆக உள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
