திருச்சி பொன்மலை பணிமனை ஊழியர் சாலை விபத்தில் பலி

திருச்சி பொன்மலை பணிமனை ஊழியர் சாலை விபத்தில் பலி

திருச்சி ஜி கார்னர் அருகே இன்று 19/10/2020
3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பின்னே வந்த லாரி மோதியதில் உயிரிழந்தார். இது தொடர்பாக கண்டோன்மெண்ட் காவல்துறையினர் விசாரணை செய்ததில் இறந்த நபர் திருச்சி பொன்மலை பணிமனையில் பணியாற்றிவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் என தெரியவந்தது.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திலீப் குடும்பத்தினர் ரயில்வே கோட்டிரஸ்
வசித்து வருவது தெரிய வந்து அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
– ஜெ.கே
