திருச்சி மொராய் சிட்டியில் புனித தோமா சீரோ மலபார் கத்தோலிக ஆலயம் துவக்கம் !

திருச்சி மொராய் சிட்டியில் புனித தோமா சீரோ மலபார் கத்தோலிக ஆலயம் துவக்கம் !
திருச்சி தழிழ் மண்ணில் தமிழ் திராவிட குடும்ப மொழியான மலையாள மொழியில் ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் உருவானது.

திருச்சி ஏர் போர்ட் மொராய் சிட்டியில் புனித தோமா சீரோ மலபார் கத்தோலிக ஆலயம்;; 18. 10. 2020 ஞாயிற்று கிழமை புதிய கட்டிட திறப்புவிழாவும் – புனிதப்படுத்தும் நிகழ்வும் கோவை மறைமாவட்ட மேதகு ஆயர் மார் போல் ஆலப்பாட். அவர்களின் தலைமையில் புனிதபடுத்தி திறக்கப்பட்டு இறைமக்களின் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. திறப்புவிழாவிலும் ஆலய வழிபாடுகளிலும் திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு.யூஜின் அடிகளார்- சகாயமாதா பசிலிக்கா திருத்தல பங்குதந்தை. ஆரோக்கியராஜ் – உதவிபங்குதந்தை லெனின் – அருள்தந்தை வின்சென்ட் செல்வராஜ் – அருள்தந்தை .ஜியோ சிரியன் கண்டத் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


ஆலய திறப்பு விழாவுக்கு முன்பதாகவே வருகைபுரிந்து திருச்சி .பொறுப்பு ஆயர்மேதகு.தேவதாஸ் அம்புரோஸ் ஆலயவேலைகளை பார்வையிட்டு வாழ்த்தி சென்றார். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பங்குபேரைவ செயலர்கள் திரு.பிஜீ K..தாமஸ்- திரு.ஜோசப் வின்செனட் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜோசப் மார்ட்டின் முன்னின்று சிறப்பாக நடத்தினார்கள். புதிய ஆலயத்தின் பங்குத் தந்தை ஷாஜன் சீரம்பன் அனைவருக்கும் நன்றி கூற விழா ஆலய ஆடம்பர கூட்டுப் பாடல் திருப்பலியுடன் இனிதே நிறைவடைந்தது. இறைமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து பங்குபெற்றது பாரட்டுகுரியது.
புனித தோமா சீரோ மலபார் கத்தோலிக ஆலயத்தின் மலையாள இறைமக்களுக்கும் – ஆலயம் உருவாக உழைத்த அருள்தந்தையர்கள் – நிர்வாகிகள் அனைவருக்கும் பிசினஸ் திருச்சி – மற்றும் என் திருச்சி இதழின் சார்பாக வாழ்த்துக்கள்.
திருச்சி தழிழ் மண்ணில் தமிழ் திராவிட குடும்ப மொழியான மலையாள மொழியில் ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் உருவாகி இருப்பது திருச்சிக்கு பெருமையே. இறைவன் வழியில் மனிதம் காண்போம்.
– கோன்ஸா சிற்பிகா
