திருச்சியில் 7 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் இயக்கம்:

0
Business trichy

திருச்சியில் 7 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் இயக்கம்:

கொரோனா ஊரடங்கு  படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு இயங்க அனுமதிக்கப்பட்டன.  அதேபோல தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் 60 சதவீத பயணிகளுடன் இயக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், பஸ்கள் ஓட்டப்படாத காலக்கட்டத்தில் கட்ட வேண்டிய சாலைவரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஸ்களை  இயக்காமல் இருந்தனர்.

MDMK

இந்த நிலையில் தமிழகத்தில்  நேற்று(16.10.2020) முதல் ஆம்னி பஸ்கள் ஓடும் என்று ஆம்னி பஸ்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊரடங்கால், கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு தயார் செய்யப்பட்டன. திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது.

Kavi furniture

இது குறித்து ஆம்னி பஸ்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘மாநில அரசின் விதிகளை பின்பற்றி 6 மாதங்களுக்கு பின் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் கண்டிப்பாக முக கவசங்கள் அணிந்தால் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஆம்னி பஸ்களில் பயணிக்க விரும்பும் பயணிகளின் எண்ணிக்கையை பொருத்துதான் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். டிக்கெட் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை’ என்றார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.