திருச்சியில் நடமாடும் ரேஷன் கடை:

திருச்சியில் நடமாடும் ரேஷன் கடை:

தமிழகத்தில் நடமாடும் நியாய விலைக்கடை திட்டத்தை முதல்வர் சென்னையில் துவங்கி வைத்தார். அந்த வகையில் திருச்சிக்கு 105 நகரும் நியாய விலைக்கடைகளுக்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக கிராமப்புறங்களில் 104 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளும், நகர்புறங்களில் 1 அம்மா நகரும் நியாவிலைக்கடைகளும் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 15,744 குடும்ப அட்டைதார்கள் பயன் அடைகின்றனர். தமிழகத்தில் இத்திட்டத்தை முதன்முறையாக மாவட்டம் முழுவதும் செயல்படுத்தியது திருச்சிதான், இத்திட்டம் மாவட்டத்தில் உள்ள 1225 ரேஷன்கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
