திருச்சியில் பள்ளிவாசலின் முகப்பு இடிப்பு கண்டித்து போராட்டம்:

திருச்சியில் பள்ளிவாசலின் முகப்பு இடிப்பு கண்டித்து போராட்டம்:
திருச்சி திருவானைக்காவலில் மேம்பாலத்தின் கீழ்புறம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியில் நேற்று முன்தினம் (13.10.2020) இடையூறாக இருந்த பள்ளிவாசலின் முகப்பு பகுதியை இடித்தனர். அளவீடு செய்ததைவிட அதிகம் இடித்ததாக கூறி முஸ்ஸீம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் சிவராசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில் அத்துமீறி பள்ளிவாசல் இடிக்கப்பட்டதாக கூறி தவ்ஹீத் ஜமாத் சார்பில் (15.10.2020) நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிவாசலுக்குள் காலனியுடன் நுழைந்த நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அதிகாரி மீனாட்சியின் செயல் கண்டிக்கதக்கது எனவும், எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் பள்ளிவாசலின் முகப்புபகுதியை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டம் தொடரும் என கூறினர்.
