APJ அப்துல் கலாமின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைப்பு திருவிழா.

0
Business trichy

APJ அப்துல் கலாமின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைப்பு திருவிழா.

பாரத ரத்னா டாக்டர் APJ அப்துல் கலாமின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைப்பு திருவிழா தொடங்கியது.

Kavi furniture

தண்ணீர் அமைப்பும் மாறல் பவுண்டேசன் இந்தியா, ஜெனித் சமூக நல அறக்கட்டளை M.A. M பொறியியல் கல்லூரி, அய்மான் மகளிர் கல்லூரி, ஓலையூர் பஞ்சாயத்து இணைந்து ஓலையூர் ஏரியில் முதற்கட்டமாக 2000 பனை விதைகளை விதைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் சார்பில்
ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் திரு .மகேந்திரன் மற்றும் திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு திரு.வேதரத்தினம் தலைமையேற்று விதைத்து தொடங்கி வைத்தனர்.

MDMK

ஓலையூர் கிராம பஞ்சாயத்து தலைவர், செயலர், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், தண்ணீர் அமைப்பின் செயலாளர் திரு.கே.சி. நீலமேகம், இணைச் செயலாளர் கி.சதீஷ்குமார், பேரா. நெடுஞ்செழியன் அம்மான் மகளிர் கல்லூரியின் இயக்குநர், துணை முதல்வர், 50 மாணவியர்கள், ஆசிரியர்கள், MAM பொறியியல் கல்லூரி சார்பில் திரு.பன்னீர்செல்வம், ஜெனித் செந்தில்குமார், கேகே பாய்ஸ் குமரன், எடமலைப்பட்டி புதூர் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் திருமதி.புஷ்பலதா, யோகிதா, ஸ்ரீலேகா,ஜெட்லி , பக்கிரிசாமி, ராபின் பேட்ரிக் , ஜான் பயஸ், பொதுமக்கள் உள்ளிட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரு கரைகளிலும் பனை விதைத்தனர்.

முன்னதாகஅப்துல் கலாம் படத்திற்கு மலர் தூவி வணங்கினர் ..தொடர்ந்து இம்மாதம் முழுதும் திருச்சி மாவட்டத்தில் லால்குடி தொடங்கி மணப்பாறை வரை பல்வேறு கிராம ஏரிகளில் பனை விதைப்புத் திருவிழா நடைபெறும். இந்நிகழ்வை தண்ணீர் அமைப்பின் இணைச் செயலர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் மற்றும் மாறல் பவுண்டேசன் இந்தியா அமைப்பின் இயக்குநர் M. விவேகானந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மேலும் பங்கேற்றவர்களுக்கு ஆதி பனைக்காவலர் விருது விருத வழங்கப்பட்டது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.