திருச்சியில் 16 ½ லட்சம் பணமோசடி செய்தவர் கைது:

0
Business trichy

திருச்சியில் 16 ½ லட்சம் பணமோசடி செய்தவர் கைது:

Rashinee album

கேரளாவை சேர்ந்த கமல் நடராஜன் (39) என்பவர் திருச்சியை சேர்ந்த அப்பு ராஜா (45)  என்பவரிடம் கார் வாங்கி தருவதாக ஏமாற்றி 16 ½ லட்சம்  பணமோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் அப்பு ராஜாவிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு 8 ½  லட்சம் பணம் வாங்கி கொண்டு கார் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அந்த கார் இயந்திர கோளாறு காரணமாக சரியாக இயங்கவில்லை. அதனால் வேறு கார் மாற்றி தருமாறு  அப்பு கேட்டுள்ளார். அதற்கு கமல் கார் மாற்றி தருவதற்கு மேலும் 8 லட்சம் பணம் கேட்டுள்ளார். அந்த தொகையையும் அப்பு ராஜா கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கி கொண்டு கமல் நடராஜன் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் அப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் கமல் நடராஜன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3 ½ லட்சம் மதிப்பிலான கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Ukr

Leave A Reply

Your email address will not be published.