கொரொனா விழிப்புணர்வுக்கான மெகதூத் அஞ்சல் அட்டை வெளியீடு

0
Business trichy

கொரொனா விழிப்புணர்வுக்கான
மெகதூத் அஞ்சல் அட்டை வெளியீடு

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில்
கொரொனா விழிப்புணர்வுக்கான
மெகதூத் அஞ்சல் அட்டை வெளியீடப்பட்டது.

MDMK

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் கொரொனா வைரஸ் நோய் covid-19 வராமல் தடுக்க முக கவசம் அணிவீர், கைகளை அடிக்கடி சுத்தம் செய்வீர், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பீர், தும்மல், இருமல் வரும்போது கைக்குட்டையால் மறைப்பீர் ,தும்மல், இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் தோன்றினால் மருத்துவமனை செல்வீர்.

Kavi furniture


தனித்திரு, விழித்திரு, விலகி இரு வாசகம் அடங்கிய 25 பைசா மதிப்புள்ள மெகதூத் அஞ்சல் அட்டை வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற்றது.

மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் கோவிந்தராஜன் அஞ்சல் அட்டையை வெளியிட திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வருவாய் உதவி ஆணையர் பிரபாகரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் சுவாதி மதுரிமா, முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், வணிக மேலாண்மை உதவி இயக்குனர் குணசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.