திருவானைக்காவலில் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பகுதியில்  கலெக்டர் நேரில் ஆய்வு:

0
Business trichy

திருவானைக்காவலில் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பகுதியில் கலெக்டர் நேரில் ஆய்வு:

MDMK

திருச்சி திருவானைக்காவலில் மேம்பாலத்தின் கீழ்புறம் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது. இந்த சர்வீஸ் சாலை பணிக்கு இடையூறாக உள்ள நிலங்களை நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் (13.10.2020)  இடையூறாக உள்ள பள்ளிவாசலின் முகப்பு பகுதியை இடித்தனர். அளவீடு செய்ததைவிட அதிகம் இடித்ததாக கூறி முஸ்ஸீம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் சிவராசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அளவீடு செய்த பகுதிக்கு மேல் இடிக்கப்பட்டிருந்தால் உரிய நிவாரணம் வழங்குவதாக கலெக்டர் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியை பார்வையிட்டு  விசாரணை நடத்தினார். மேலும் சர்வீஸ் சாலை அமைக்க இடையூறாக உள்ள கோயில், ஓட்டல் ஆகியவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.