உண்மைக் கதை பாகம் 6; மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு கையால் விருது

0
1

உண்மைக் கதை பாகம் 6; மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு கையால் விருது

(உண்மைக் கதையை தொடர்ந்து கூறும் எங்களுடைய முயற்சி இந்த வாரமும் தொடர்கிறது, தன்னம்பிக்கையும் விடாமுயற்சியையும் அடையாளப்படுத்தும் விதமாகவே ஒரு சாமானியன் வெற்றியாளனாக உருவானதை காட்டும் முயற்சி தான், இது)

தொடர்ச்சி ; ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து. நம்முடைய கதாநாயகன் NSGFI என்ற தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார். தமிழகம் முழுவதும் இருந்து 32 வீரர்கள் NSGFI என்ற தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு செல்ல தயாராகின்றனர். அந்தப் போட்டி மேற்குவங்க மாநிலம் சிலிகுரி அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்க செல்ல ரயில் பயணத்திற்காக முன்பதிவுடிக்கெட்டிற்கு விண்ணப்பிக்கின்றனர். டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் இருக்க. ரயில் பயணத்தை மேற்கொண்டோம்..
எக்மோரில் இருந்து ரயில் புறப்பட சீட் கன்பார்ம் ஆகாததால் இரயிலின் கழிவறை அருகே நின்றுகொண்டே மேற்கு வங்கம் வரை பயணித்தோம்.
பிறகு பயணம் முடிந்து சிலிகுரி சென்று. நேஷனல் ஸ்டேடியத்திற்க்கு தங்களது பயணத்தை தொடங்கினேன். இந்த பகுதியில் அதிகப்படியான குளிர் நிலவியதால். பயிற்சி ஆசிரியர் உட்பட மாணவர்கள் என்று அனைவரும் மிகவும் சிரமப்பட்டு நேஷனல் ஸ்டேடியம் சென்றோம். அருகே அனைவருக்கும் ரூம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து ரூமுக்கு சென்றோம். அதேசமயத்தில் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் நின்று கொண்டே வந்ததால் அனைவரும் சோர்வுடன் காணப்பட்டோம், ரூமில் அனைவரும் ஓய்வெடுக்க தொடங்கினோம்.
பிறகு அனைவரும் ஓய்வு எடுத்து முடித்த பிறகு பயிற்சியாளர் அனைவரையும் அழைத்து. போட்டியில் வெல்வதற்கான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் பயிற்சியையும் வழங்கினார்.

 

2


மேலும் அந்த பகுதியில் அதிகப்படியான குளிர் நிலவியது. நான் பயிற்சி எடுக்கும் பொழுது 2 லோயர், 2 ஆப்பர் 2 பணியனை அணிந்து பயிற்சி மேற்கொண்டேன்.
இப்படியாக அந்தப் பகுதியில் பயிற்சியை மேற்கொள்ள முடிந்தது.‌ பிறகு தேசிய போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது யாரும் எதிர்பாராத வண்ணம் நான் மின்னல் வேகத்தில் ஓடி வெற்றி பெறுகின்றேன்.

தமிழ்நாட்டில் இருந்து சென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்று, தேசிய போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடினேன். ஊட்டியில் எதிரே ஓடக்கூடிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த வீரரும் நானும் சம அளவில் ஓடினோம். இரண்டு பேரும் நூலிழையில், முந்த முயற்சிக்கின்றோம். தூர்தர்ஷனில் அப்பொழுது லைவ் நிகழ்ச்சியாக தேசிய விளையாட்டுப் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. இருவரும் முந்திக் கொண்டு செல்ல மகாராஷ்டிரா காரரை தோற்கடித்து நான் வெற்றி பெறுகின்றேன். அப்பொழுது ஒலிப்பெருக்கி எங்கும் தமிழ்நாடு தங்கம் வென்றது என்று அறிவிக்கப்படுகிறது. மேலும் தேசிய விளையாட்டு போட்டியில் வெள்ளியும் வெல் கின்றேன்.

வெற்றி பெற்ற பதக்கத்தை அன்று எனக்கு மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வராக இருந்த, சிகப்பு சிங்கம் ஜோதிபாசு அணிவித்தார். இது எனக்கு எல்லையற்ற இன்பத்தினை தருவதாக இருந்தது. மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் பி. டி. உஷா போன்ற விளையாட்டுத் துறையின் முக்கிய பிரபலங்களும் இருந்தனர்.
தமிழ்நாட்டில் இருந்து சென்ற 32 பேர்களில் அன்று நான் மட்டும் வென்று இருந்தேன். ஒருவகையில் மற்ற மாணவர்கள் வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வெற்றி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


வெற்றியைக் கொண்டாடும் விதமாக என்னையும் சக வீரர்களையும் மேற்கு வங்கத்தை சுற்றிக் காட்ட எங்களுடைய பி.டி. சாரும், அம்மையப்பன் சாரும் அழைத்து செல்கின்றனர். மேற்கு வங்கத்தில் அன்று சிலிகுரி இப்பகுதி முழுக்க சுற்றி பார்த்து கொண்டாட்டம் போட்டுவிட்டு. அன்று இரவு தமிழகம் செல்ல தயாராகினோம்.
இந்த முறை டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிவிட்டதால் அனைவரும் ஆற அமர நிதானமாக சென்னை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கினோம். அங்கிருந்து ராமகிருஷ்ணா பள்ளி செல்லும் வேளையில் என்னுடைய மணம் பல சிந்தனைகளை எண்ணிக் கொண்டு இருக்க. அதே சமயத்தில் மிகப்பெரிய போட்டியில் வெற்றி. முதல்வர் கையில் விருது, முக்கிய பிரபலங்களின் பாராட்டு, இவ்வளவு பெரிய வெற்றியை அடைய, எவ்வளவு பெரிய உழைப்பு வேண்டி இருக்கிறது. என்றெல்லாம் பல சிந்தனைகளை எண்ணிக் கொண்டிருக்கையில் பள்ளி வந்தது.

பள்ளியினுள் சென்றேன். ராமகிருஷ்ணா பள்ளியின் சாமிஜி, ஆசிரியர்கள் என்று அனைவரும் பாராட்ட, மறுபக்கம் எனக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் பள்ளியில் மிகப்பிரம்மாண்டமாக தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செம்மலை மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை வந்தனர், இப்படியாக அன்று எனக்காக அந்த பாராட்டு விழா நடைபெற்றது.
அன்று அந்த மேடையில் என்னை பேச அழைக்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள். பேச்சுகள் தடுமாறி, என்ன செய்வதென்று அறியாது மைக்கை விட்டு விலகி விட்டேன்.
மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செம்மலை அவர்கள் பதக்கத்தை அணிவித்து, வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் வந்திருக்கக்கூடியவர்களிடம் உண்டியல் வசூல் செய்யப்பட்டது. அந்த உண்டியல் வசூலில் 32, 000 ரூபாய் கிடைக்கிறது.
அந்த 32 ஆயிரத்தை செம்மலை அவர்கள் முன்னிலையில் பள்ளி நிர்வாகம் எனக்கு வழங்கியது. வாழ்வின் கஷ்டங்களை மட்டும் சிந்தித்து கொண்டிருந்தால், வெற்றி என்பது எட்டாக் கனியாகி விடும். இனி வறுமை என்பது உனக்கு இல்லை இந்த 32 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள், இதை முதலீடாக எண்ணி செயல்படு என்று எனக்கு மேடையில் இருந்த ஆசிரியர்கள் ஊக்கம் அளித்தனர். இது எனக்கு மேலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியது.

 

மேலும் அந்தப் பாராட்டு விழாவில் நான் ஆணழகன் போட்டியில் பங்கேற்கிறேன். மேலும் அந்த விழாவின் இறுதியில் எனக்கு ஆணழகன் mr.rkm என்ற பட்டத்தை தருகின்றனர்.

இப்பொழுது வாழ்வின் அதிரடி மாற்றம் நிகழ தொடங்கியது. என்னுடைய சீனியர் ராஜீவ் அவர்களின் நண்பர் திருவேங்கடமலை சரவணன் என்பவர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பத்திரிக்கையாளராக பணியாற்றிவருகிறார்.

அவருக்கு என்னைப் பற்றிய தகவல் போய் சேர, அவர் என்னை சந்திக்க வருகிறார்.
அடுத்த வாரம் தொடரும்

3

Leave A Reply

Your email address will not be published.