திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்:

திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்:

திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு நேற்று ( 13.10.2020) மாலை பெயர், முகவரி இல்லாத மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக எழுதி இருந்தது. இதுகுறித்து தலைமை தபால் நிலையத்தின் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், மற்றும் வெடிகுண்டு கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் வந்து தபால் நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த பொய்யான தகவலை அனுப்பிய மர்மநபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
