ரேஷன் பொருட்கள் வாங்க மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு சலுகை:

ரேஷன் பொருட்கள் வாங்க மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு சலுகை:

ரேஷன் கடைகளில் தற்போது பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் சிரமத்திற்கு உள்ளாகும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தாங்கள் குறிப்பிடும் நபர் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு நியாவிலைக்கடையில் வழங்கப்படும் அங்கீகாரச்சான்று விண்ணப்ப படிவத்தில் தனக்கு உதவும் நபரின் விபரங்களையும், அவருடைய ஆதார் அட்டை நகலையும் இணைக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் க.சிவராசு வெளியிட்டுள்ளார்.
