திருவெரம்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை:

0

திருவெரம்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை:

தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர், மற்றும் சமையலர் போன்ற காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஏராளமானனோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால் நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரா்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், இந்த பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவெரம்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று நேர்காணல் என கடிதம் வந்துள்ளது.  நேர்காணல் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தெரியாமல் குழந்தையுடன் தாய்மார்கள், பெண்கள்  காத்திருந்தனர். பின்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை அறிந்து ஆத்திரத்தில் திருவெறும்பூர் ஒன்றிய வட்டார அலுவகத்தை முற்றுகையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.