திருவானைக்காவலில் பள்ளிவாசல் இடிப்பு முஸ்லிம்கள் சாலை மறியல்:

திருவானைக்காவலில் பள்ளிவாசல் இடிப்பு முஸ்லிம்கள் சாலை மறியல்:

திருச்சி திருவானைக்காவலில் மேம்பாலத்தின் கீழ்புறம் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது. இந்த சர்வீஸ் சாலை பணிக்கு இடையூறாக உள்ள நிலங்களை நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அங்கு இடையூறாக உள்ள பள்ளிவாசலின் முகப்பு பகுதியை நேற்று இடிக்க முயன்றனர். அதனால் அப்பகுதி முஸ்லீம் மக்கள் பள்ளிவாசலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதால் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அளவீடு செய்த பள்ளிவாசலின் முகப்பு பகுதி இடிக்கப்பட்டது. அளவீடு செய்ததைவிட அதிகம் இடித்ததாக கூறி முஸ்ஸீம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் சிவராசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அளவீடு செய்த பகுதிக்கு மேல் இடிக்கப்பட்டிருந்தால் உரிய நிவாரணம் வழங்குவதாக கலெக்டர் தெரிவித்தார். அதன்பின் வெளியே வந்த முஸ்லீம் அமைப்பினர் உரிய நீதி கிடைக்காவிட்டால் 16ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து கலெக்டர் அலுவலகத்திலும் போராட்டம் நடத்துவதாக முடிவு எடுத்து கலைந்து சென்றனர்.
