என்.ஐ.டி திருச்சி மற்றும் சி-டிஏசி புனே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக புரிந்துணர்வு ஒப்பந்தம் 12 அக்டோபர் 2020 தேதி சஞ்சய் தோத்ரே, கல்வி, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை மாநில அமைச்சர், இந்திய அரசு, டாக்டர்.அசுதோஷ் சர்மா, செயலாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை(DST) மற்றும் அஜய் பிரகாஷ் சாவ்னி,செயலாளர்,மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeITY) ஆகியோரின் முன்னிலையில் என்.ஐ.டி திருச்சி சார்பாக, இயக்குநர் டாக்டர்.மினி ஷாஜி தாமஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. சி.டி.ஏ.சி சார்பாக , டாக்டர் ஹேமந்த் தர்பாரி,பொது இயக்குநர் கையொப்பமிட்டார். இந்நிகழ்வுகள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் நடந்தது.
இந்த ஒப்பந்தம் மூலம் என்.ஐ.டி, பெங்களூர் ஐஐஎஸ்சி, 7 ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சூப்பர் கம்ப்யூட்டிங் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.17.11 கோடி மதிப்பீட்டில் சூப்பர் கம்ப்யூட்டர் அமைப்பதற்கு மத்திய அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் ரூ.2 கோடி மதிப்பில் உயர் தரம் வாய்ந்த சிபியு, ஜிபியு உடன் உயர் தரத்துடன் சூப்பர் கம்ப்யூட்டிங் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அனைத்து தகவல்களையும் விரைவாக பெறவும், அனுப்பவும் செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் திறன் ஆகியவற்றை மாணவர்கள் பயன்படுத்த ஒரு வாய்ப்பு அமைக்கப்பட்டுள்ளது.
