திருச்சி அருகே நகை பணம் திருட்டு:

0
Business trichy

 

web designer

திருச்சி அருகே நகை பணம் திருட்டு:

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை  அருகே உள்ள அதவத்தூர் சக்தி நகரில் வசிப்பவர் தண்டபானி (70). இவர் குடும்பத்துடன்  கடந்த 10-ந்தேதி பழனி கோவிலுக்கு சென்று உள்ளார். இவரின் வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் தண்டபானிக்கு தகவல் கொடுத்தனர்.  தகவலறிந்து தண்டபானி நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள்,  ரூ.2 ½ லட்சம் பணம், மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கபட்டிருந்தது.  இதுகுறித்து தண்டபானி போலீசில்  புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.