தேசிய அஞ்சலக வாரத்தை முன்னிட்டு அஞ்சல் தலை கண்காட்சி

தேசிய அஞ்சலக வாரத்தை முன்னிட்டு
அஞ்சல் தலை கண்காட்சி
தேசிய அஞ்சலக வாரத்தை முன்னிட்டு அஞ்சல் தலை கண்காட்சியினை திருச்சி அரசு அருங்காட்சியகம் நடத்தியது
அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் காட்சிப்படுத்தியதை காணொளி மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் தலைமை வகித்து பேசுகையில்,

அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும், தேசிய அஞ்சல் வாரமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய அளவில் அஞ்சல் சேவைகளின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அஞ்சல் வாரத்தினை கடைப்பிடிக்கிறோம்.

பொழுதுபோக்கின் அரசன் அஞ்சல்தலை சேகரிப்பு ஆகும்.
பொழுதுபோக்குடன் பொது அறிவை தரும் சேகரிப்பு கலைதான் அஞ்சல் தலை சேகரிப்பு.
ரயில்வே அஞ்சல் சேவை, விமான அஞ்சல் சேவை, கப்பல் அஞ்சல் சேவை என நவீன காலத்திற்கு ஏற்ப அஞ்சல் சேவைகள் பல்வேறு வளர்ச்சியை அடைந்து வருகின்றன.
அஞ்சல் சேவை மட்டுமின்றி அஞ்சலகத்தில் சேமிப்பு வங்கி திட்டங்களும் உள்ளன என்றார்.
சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் நாணயங்கள் குறித்து வெளிவந்த சிறப்பு அஞ்சல் உறையை காட்சிப்படுத்தி விளக்கினார்.
அஞ்சல்தலை சேகரிப்பாளர் தாமோதரன் இளவரசி டயானா திருமண தின சிறப்பு அஞ்சல் உறையை காட்சிப்படுத்தி விளக்கினார்
அஞ்சல்தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அஞ்சல் முத்திரை குறித்து காட்சிப்படுத்தி விளக்கினார்.
