திருச்சியில் நகைக்காக மூதாட்டி கொலை:

0
1 full

திருச்சியில் நகைக்காக மூதாட்டி கொலை:

திருச்சி சங்கிலியாண்டபுரம் நாகம்மை பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவருடைய மனைவி ஆனந்தி (79). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவருடைய மகன் அதே பகுதியில் வேறு வீட்டில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அடிக்கடி வந்து தாயை பார்த்து செல்வார்.

இந்நிலையில் நேற்று காலை தாயை பார்க்க சென்ற போது ஆனந்தி கட்டிலில் கை, கால்களை கட்டிய நிலையிலும், வாயில் துணி திணிக்கப்பட்டும் பிணமாக கிடந்தார். ஆனந்தி அணிந்திருந்த 1 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கபட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்காக மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.