இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் – தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு மறியல்

0
Business trichy

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் – தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு மறியல்

புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், வியாபாரிகளுக்கு எதிரான கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் சார்பில் திருச்சி, தெப்பக்குளம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கிழக்குப் பகுதி செயலாளர் அன்சர்தீன் தலைமை வகித்தார்.

Image
Rashinee album

முன்பாக நந்திகோவில் அருகே தொடங்கிய ஊர்வலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் துவக்கி வைத்தார். மேலும் வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமராஜ் வாழ்த்துரை வழங்கினார். மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவா மற்றும் சண்முகம், அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.

மேலும் மறியலில் இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் ஆயிஷா, செயலாளர் பார்வதி மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் செல்வகுமார், நிர்வாகி மார்க்கெட் தேவா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் செயலாளர் இப்ராகிம், தலைவர் சூர்யா, பொருளாளர் பாட்ஷா ஆகியோரும்.

மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் முரளிதரன் பொன்மலை பகுதி செயலாளர் சுந்தர் ராஜ் தெப்பக்குளம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், சரவணன், மார்க்கெட் வியாபாரி சங்க நிர்வாகிகள் ஜக்கரியா ,ரவி ஆகிய நிர்வாகிகளும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 30 பெண்கள் உட்பட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.