திருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை…

தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது திருநங்கை ஒருவர் சமீபத்தில் காவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சிக் கல்லூரியில் கடந்த சில மாதங்களாக பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் காவலர் பயிற்சிக் கல்லூரியில் முதல்வர் மற்றும் துணை முதல்வரால் திருநங்கை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து டிஜிபியிடம் தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பிரச்சினை தொடர்பாக திருநங்கையிடம் காவல் பயிற்சி கல்லூரி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திருநங்கை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
