திருச்சி சமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தைகள் பிணமாக மீட்பு …
திருச்சி சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடையை சேர்ந்த தர்ஷினி மற்றும் நரேன் என்ற இரு குழந்தைகள் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் தவறி விழுந்தனர்.
இதை அறிந்த மக்கள் சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர் .
வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகம் வந்து கொண்டிருந்ததால் குழந்தைகளை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்பு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. பின்னர் விடிய விடிய குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை குழந்தைகள் விழுந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பிணமாக கிடந்தனர். உடல்களை மீட்டு போலீசார் குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.