திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தேசிய தபால்வார விழா தொடக்கம்…

ஆண்டுதோறும் அக்டோபர் 9 ஆம் தேதி தேசிய தபால் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தேசிய தபால்வார விழா நேற்று முதல் தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தபால் துறையில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
