நிவாரண உதவி வழங்கினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் …

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கடந்த 5 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 18 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தில் உடமைகளையும், வீட்டையும் இழந்த குடும்பத்தாருக்கு உடனடியாக உடை , நிவாரண பொருட்கள், உணவு ஆகியவை வழங்குவதற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட அன்று பணி நிமித்தமாக சென்னையில் இருந்ததால் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் தலா ரூபாய் 3 ஆயிரம் நிவாரணமாக வழங்கினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
