திருச்சியில் 5 ஆயிரம் சலூன் கடைகள் மூடல்…

0
Business trichy

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முடிதிருத்தும் திருவிழாவின் 12 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

போதிய சாட்சியங்கள் இல்லாததால் இந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் சலூன் கடை உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

web designer

அதன்படி திருச்சி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மருத்துவர் சமூகம் நல சங்கம் சார்பில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

loan point

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

 

nammalvar

இதனால் திருச்சியை சுற்றி உள்ள தா.பேட்டை, மணப்பாறை, முசிறி, வையம்பட்டி, துவரங்குறிச்சி, வளநாடு , தொட்டியம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது .

IAS academy

Leave A Reply

Your email address will not be published.