திருச்சி ரேசன் கடைகளில் சர்வர் பிரச்சினை காத்திருக்கும் அப்பாவி பொதுஜனம்

0
1 full

திருச்சி ரேசன் கடைகளில் சர்வர் பிரச்சினை காத்திருக்கும் அப்பாவி பொதுஜனம்

ஒரு காலத்தில் ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைக்குமா என பையும், கையுமா செருப்பு தேய அழைந்த பொதுஜனம். இன்று தங்கள் “கை ரேகையை” ரேசன் கடை மெஷின் ஏற்றுகொண்டு பொருட்கள் கிடைக்க வேண்டும் சாமி என தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டும் சூழல் திருச்சியில் தற்பொழுது நிலவுகிறது.

2 full

விரிவாக பார்ப்போம்.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் மூலம் நுகர்வோர் அனைவரும் ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கும் பொழுது பயோமெட்ரிக் முறையில் “கைரேகை” பதிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கை ரேகையை ஒவ்வொரு நுகர்வோரிடம் ரேசன் கடை ஊழியர்கள் பெரும் பொழுது பல்வேறு இடர்பாடுகள் எழுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

உதாரணத்திற்கு இந்த திட்டத்திற்கு முன்பு ஒரு நாளுக்கு ஒரு ரேசன் கடைகளில் சுமார் நூற்றி இருபது நுகர்வோருக்கு பொருட்களை கொடுக்க முடிந்த பணியாளர்களால், இன்று அறுபது நபர்களுக்கு கூட பொருட்களை கொடுக்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இதற்கு முக்கிய காரணம் மேற்படி ரேசன் கடை மெஷின்களை கண்ரோல் செய்யக்கூடிய சர்வர் குறைந்த திறன் வாய்ந்ததாக உள்ளதாக குற்றசாட்டப்படுகிறது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாவிலுள்ள அறுநூற்றுக்கும் மேற்பட்ட ரேசன் கடை மெஷின்களை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள “தேசிய தகவல் மய்யத்தில்” உள்ள பிரதான சர்வர் தான் ஒருங்கிணைக்கிறது. மேற்படி சர்வரின் திறன் மிக, மிக குறைவாக உள்ளதே பல்வேறு பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் ஆளாக நேர்கிறது.

எனவே பொதுமக்களின் இன்னல்களை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தின் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.