கேடயம் உதவியால் காணாமல் போன குழந்தை மீட்பு அசத்திய திருச்சி மாவட்ட காவல்துறை

0
gif 1

கேடயம் உதவியால் காணாமல் போன குழந்தை மீட்பு அசத்திய திருச்சி மாவட்ட காவல்துறை

இரண்ட மணி நேரத்தில் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்த திருச்சி மாவட்ட காவல்துறை

06.10.2020 இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வாளாடி சேர்ந்த தேவி 31/20 என்பவர், கேடயம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தனது மூன்று வயது குழந்தை ஜென்னிசை கீழ வயலூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரின் முதல் மனைவி தூக்கிச் சென்று விட்டதாக புகார் அளித்ததன் பேரில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா உத்தரவுப்படி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் மற்றும் சைல்டு லைன் முரளி அடங்கிய குழுவினர் இரண்டு மணி நேரத்தில் அந்த குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

gif 3
gif 4

 

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது முழு அக்கறை கொண்டு அவர்களுக்காக திருச்சி மாவட்ட காவல்துறை உருவாக்கப்பட்ட கேடயம் செயலி மூலம் நாளுக்கு நாள் பொதுமக்கள் பலர் பயனடைந்து வருகின்றனர் என்பது பாராட்டுக்குரிய விஷயமாக இருந்து வருகிறது இச் செயலியை அறிமுகப்படுத்தி அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு அளித்து நல்லதொரு மதிப்பினை பெற்று வரும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோருக்கு என் திருச்சி சார்பாக ராயல் சல்யூட்

-ஜெ.கே

gif 2

Leave A Reply

Your email address will not be published.