திருச்சியின் முக்கிய சாலையில், கார் கண்ணாடியை உடைத்து திருட்டு

திருச்சியின் முக்கிய சாலையில், கார் கண்ணாடியை உடைத்து திருட்டு
திருச்சி ஒத்தக்கடையில் இருந்து சோனா மீனா திரையரங்கு செல்லும் பகுதி அரசு அலுவலகங்கள் அமைந்த பகுதி, மற்றும் முக்கிய போக்குவரத்து பாதையாக உள்ளது.


அந்தப் பகுதியில் மாலை 5 மணியளவில் சென்னை எண் பொருந்திய இனோவா காரை நிறுத்திவிட்டு மற்றும் டூவீலரில் வந்த நண்பர்கள் காரின் அருகே டூவீலரை நிறுத்திவிட்டுஅருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளனர். பிறகு வாகனத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்க ஒத்தக்கடை அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளனர். இந்த உதிரிபாக கடையில் பொருட்கள் கிடைக்காததால் சிறிது நேரம் பேசிவிட்டு, மீண்டும் கார் உள்ள பகுதிக்கு, காரை கடந்து 7 மணியளவில் சென்றுள்ளனர். அப்போது காரை பார்த்திருக்கின்றனர். ஆனால் எவ்வித மாறுதலும் இல்லாமல் தான் இருந்திருக்கிறது. பிறகு நண்பர்கள் அனைவரும் பேசி முடித்துவிட்டு 7. 48 மணி அளவில் காரை எடுக்க வரும் பொழுது. கார் கண்ணாடி உடைக்கப்பட்ட லேப்டாப் மற்றும் ஆவணங்கள் உள்ள இரண்டு பேக்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், 100 அவசர உதவி எணைக்கும் தகவல் கொடுக்க, ஃபேக்ட்ரோ வாகனத்தில் வந்த காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினார், கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து சென்றார்.
மேலும் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரை நன்கு கவனித்து நோட்டமிட்டே திருடிச் சென்றுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் அவர்கள் திருடிச் சென்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஏதுமில்லை. ஆனா அதில் இருந்து 30 மீட்டர் தொலைவில் ஏடிஎம்மில் சிசிடிவி கேமரா உள்ளது மற்றும் ஒத்தக்கடை சிக்னலில் கேமராக்கள் இருப்பதும் மற்றொரு புறம் சிறிது தொலைவில் இருப்பதை, நோட்டமிட்டே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க இருக்கின்றனர். ஆனாலும் சிசிடிவி கேமராக்கள் நகரைச் சுற்றி இருப்பதால் எளிதில் பிடித்து விடலாம் என்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
