உண்மைக் கதை பாகம் 5 : 50 இட்லி, 25 புரோட்டா, 5 ஆம்லெட்..

0
1

உண்மைக் கதை பாகம் 5 : 50 இட்லி, 25 புரோட்டா, 5 ஆம்லெட்..

(ஒருவர் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வை அப்படியே பதிவு செய்யும் எங்களுடைய பதிவு இந்த வாரமும் தொடர்கிறது. இதன் மூலம் வாழ்வில் அனைத்து அங்கங்களையும் எப்படி கடந்து செல்வது என்பதையே இந்தக் கதை மூலம் நாங்கள் கூற விரும்புகின்றோம். சரி கதைக்கு சொல்லுவோம்)

இப்படியாக செங்கல்பட்டு பள்ளியில் என்னுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க. பீ-டி மாஸ்டர் , ஹெட்மாஸ்டர் அம்மையப்பன், சீனியர் ராஜு ஆகியோர் என் மீது பெரிதும் அக்கறை செலுத்தி வந்தனர். நீ வாழ்க்கையில் பெரிய நிலைக்கு செல்ல வேண்டும் என்று எப்பொழுதும் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்கள். அந்த சமயத்தில்தான் ராமகிருஷ்ணா மிஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்யின் சுவாமிஜி இடம் என்னை அழைத்துச் செல்கின்றனர். எனது சுறுசுறுப்பைப் பார்த்து சுவாமிஜி அவர்கள் என்னை அவரது பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். பிறகு பனகல் பார்க் அருகே அமைந்துள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் இணைக்கின்றேன்.

2

எப்போதும் போலவே இந்தப் பள்ளியிலும் படிப்பிலும் விளையாட்டிலும் எனது முழு ஆர்வத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். அதனால் சீக்கிரத்திலேயே பள்ளி முழுக்கு எனது பெயர் அறிமுகமானது. ராமகிருஷ்ணா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அதிகம் பயிற்சி எடுத்தேன். ஜோனல் லேவெல் போட்டியில் பங்கேற்க பள்ளி நிர்வாகம் என்னை தேர்வு செய்கிறது. 100 மீட்டர், 200 மீட்டர், லாங் ஜம்ப் போட்டிகளில் முதல் பரிசை வென்று பள்ளிக்கு திரும்பினேன். பள்ளியின் சுவாமிஜி மற்றும் அனைவரும் என்னைப் பாராட்டிய அந்த நிகழ்வு அழகான காட்சியாக இன்றும் கண்ணுக்குத் தெரிகிறது.

பிறகு மாவட்ட அளவிலான போட்டி, அதன்பிறகு ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி மற்றும் நாகர்கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி என்ற அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்து வெற்றி பெறுகிறேன். இப்படித் தொடர்ந்து மாநில அளவிலான போட்டியில் வெல்வதை பார்த்த பள்ளி நிர்வாகம், விளையாட்டுத் சம்பந்தமாக எனக்கு அனைத்து உதவிகளையும் பெரிய அளவில் செய்து கொடுத்து வந்தார்கள்.

அப்போதுதான் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேர்ந்தேன். ஸ்போர்ட்ஸ் அகாடெமி எனக்கு பெரிதும் உதவியது அதன் கோட் சாக இருந்த நாகராஜன் சார் செய்த ரெக்கார்டை நான் உடைத்தேன். அப்பொழுது கோட்ச் நாகராஜன் சார் என்னை வந்து கட்டி அணைத்துக்கொண்டார். அன்றைய ரெக்கார்டுக்கு காரணமான அம்மாபேட்டை மைதானம் வாழ்வின் மறக்கமுடியாத மைதானமாக மாறியது. மேலும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கோட்ஸ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று என்னை சாப்பிட வைக்கிறார். அன்று 50 இட்லி, 25 புரோட்டா, 5 ஆம்லேட் சாப்பிட்டேன். அதைப் பார்த்த அவர் அசந்து விட்டார்.

ஓவியம் ரமேஷ்

அந்த சமயங்களில் ராமகிருஷ்ணா பள்ளியிலே சிறிது காலம் தங்கினேன் பிறகு முத்து சரவணன் சார், ஹெட்மாஸ்டர் அம்மையப்பன், சுரேஷ் சார் உதவியுடன் விவேகானந்தா யூத் ஹாஸ்டல் விடுதியில் சேர்ந்தேன். அந்த காலகட்டத்தில் விடுதியில் இருந்து பள்ளிக்கு வர இரயிலையே பயன்படுத்துவேன். ரயில் டிக்கெட் எடுக்க அன்றைய தினம் என்னிடம் பணம் இல்லாததை உணர்ந்த என்னுடைய கோட்ச் நாகராஜன் சார் எனக்கு ரயில் சீசன் டிக்கெட் எடுத்து தருகிறார்.

அப்பொழுதெல்லாம் தினமும் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து பஜனை செய்துவிட்டு சிறிது நேரம் பயிற்சி மேற்கொள்வேன். விடுதியில் வாரத்திற்கு ஒரு முறை சமைப்பதற்கான பணி எனக்கு வரும் அன்றைய தினம் சமையல் கலைஞர்களுக்கு உதவி செய்வேன். அப்படியே அவர்களோடு இணைந்து சமைக்கவும் கற்றுக்கொண்டேன். பிறகு ருசியாகச் அமைக்கும் அளவிற்கு தேர்ச்சி பெற்றேன்.
இப்படி எத்தனை வேலைகள் இருந்தாலும் காலை பள்ளிக்குச் செல்வதும், மாலை மைதானத்துக்கு செல்வதும் என்றுமே தவறியது இல்லை. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடுதியில் உள்ள வேலைகளை முடித்து ஏழு முப்பது மணிக்கு எல்லாம் பள்ளிக்கு சென்று விடுவேன்.

அந்த சமயத்தில் தான் சுரேஷ் சார் என்னை அழைத்து விளையாட்டு என்பது வெறுமனே ஓடுவது மட்டுமல்ல அதற்கு ஊட்டச்சத்தும் உடல் வலிமையும் மிக முக்கியம். விடுதி சாப்பாடு மட்டும் உனது உடல் வலிமையைப் அதிகரிக்காது என்று கூறி. அருகில் உள்ள ஹோட்டல் கடைக்கு என்னை அழைத்துச் சென்று, ஹோட்டல் கடை காரரிடம், இந்தப் பையன் என்ன சாப்பிட கேட்டலும் கொடுங்கள், அதை என் கணக்கில் எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றார், அன்று முதல் ஒருநாள் சிக்கன் ரைஸ், பீஃப் பிரியாணி, என்று இன்று முதல் வாரத்திற்கு ஒரு முறை அசைவ உணவு சாப்பிட்டேன்.

இப்படியாக மூன்று வருடம் விவேகானந்தர் யூத் ஹாஸ்டல் என்னை சொந்தப் பிள்ளையைப் போல கவனித்துக் கொண்டது. அன்றைய காலகட்டத்தில் ஈஸ்வரன் சார் அவர் (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொது செயலாளர்) அவர் எனக்கு அறிவுரைகளை வழங்குவார், அவருடைய அறிவுரைகள் முலம் தான் ஒழுக்கத்தை நான் கற்றுக் கொண்டேன். மேலும் நீ வாழ்வில் எந்த நிலைக்குச் சென்றாலும் லஞ்சம் ஊழல் போன்ற எதிலும் ஈடுபட கூடாது என்று அறிவுரை வழங்கியவர் . இப்படி எனது ஆசிரியர்களிடமிருந்து அன்பையும் உணரத் தொடங்கினேன்.

(உண்மைக் கதை அடுத்த வாரம் தொடரும்)

3

Leave A Reply

Your email address will not be published.