தெரியுமா !!!

அக்.1 முதல் சில்லறையில் விற்பனை செய்யப்படும் பேக்கிங் செய்யப்படாத பலகாரம், இனிப்புகளை எத்தனை நாட்களுக்குள் பயன் படுத்தலாம் என்று தேதி குறிப்பிடுவது கட்டாயம் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இரு தவணையாக பி.எப். வட்டி!
வருங்கால வைப்பு நிதியில் வழங்கப்படும் வட்டி இந்த ஆண்டில் இரு தவணையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 2019-2020 நிதி ஆண்டுக்கான வட்டியானது 8.50%ல், முதல் தவணையாக 8.15 சதவீதமும், 2வது தவணையாக டிசம்பர் மாதத்தில் 0.35 சதவீதமும் என இரு தவணையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.


அக். 1-ம் தேதி முதல் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் ஓட்டுநர் உரிமம், ஆர்சி புக், காப்பீடு போன்றவற்றை காகிதங்களாக வைத்திருக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக ஸ்மார்ட்போனில் டிஜிலாக்கரைப் பதிவிறக்கம் செய்து இந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்துக் கொள்ள முடியும். போக்குவரத்து போலீஸார் ஆய்வின் போது டிஜிட்டல் ஆவணங்களைக் காண்பித்தாலே போதுமானது. செல்போனில் பேட்டரி சார்ஜ் இல்லை யென்றால் வழக்கம்போல் கப்பம் கட்ட வேண்டும்.. ஜாக்கிரதை..!
கிரெடிட், டெபிட் கார்டுகளில் புதிய விதிமுறை
கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இனிமேல் உள்நாட்டில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாடுகளில் பரிவர்த்தனை செய்ய கணக்கு வைத்துள்ள வங்கியிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே கார்டுகள் அனுமதிக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் ஆப்ட் இன், ஆப்ட் அவுட் சேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்படி வெளிநாட்டுப் பரிவர்த்தனைகள், உள்நாட்டுப் பரிவர்த்த னைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் போன்றவற்றுக்குக் குறிப்பிட்ட அளவு கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும். அதோடு வெளிநாடுகளில் இருந்து ரூ.7 லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தால், 5 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் நடைமுறை அக்.01 முதல் நடைமுறைக்கு வருகிறது.
2 பான் கார்டு வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்..!
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால் வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால் அதில் ஒன்றை உடனடியாக செயலி ழக்க செய்து விடுவது சட்ட நடவடிக்கையில் சிக்காமல் தப்பிப்பதற்கான முக்கிய வழியாகும். என்.எஸ்.டி.எல் (ழிஷிஞிலி) வலைத்தளம் அல்லது வருமான வரி அலுவலகத்திற்கு நேராக சென்றால் அங்கு இதற்கென ஒரு படிவம் வழங்கப்படும். இந்த படிவத்தில் நீங்கள் தொடர விரும்பும் பான் எண்ணை குறிப்பிட்டு, மீதமுள்ள பான் தகவலை பார்ம் எண் 11 படிவத்தில் நிரப்பவும்.
இது தவிர படிவத்துடன் ரத்து செய்யப்பட வேண்டிய பான் கார்டை நகலெடுத்து இணைக்கவும்.
