15 லட்சம் லோன் வேணுமா..?

0
1 full

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் உரிய ஆவணங்களை சமர்பித்து ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். சரி அதற்கு என்னென்ன தகுதிகள்..?
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18&60 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனியார் கடன் திட்டம் மூலமாக அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்குகிறார்கள். ஆண்டு வட்டி விகிதம் 5 முதல் 8 சதவீதம் வரை நிர்ணயித்துள்ளார்கள்.

பெண்களுக்கும் ரூ.15 லட்சம் – குழுவாக வந்தால்…
பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி : ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் மட்டுமே. சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் வசூலிக்கப்படும்.

3 half

Leave A Reply

Your email address will not be published.