மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் தண்ணீர் அமைப்பின் சார்பில் கே.சாத்தனூர் பெரிய ஏரிக்கரையில் பனை விதைப்பு

0
1 full

மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் தண்ணீர் அமைப்பின் சார்பில் கே.சாத்தனூர் பெரிய ஏரிக்கரையில் பனை விதைப்பு

நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் .கே.சி. நீலமேகம் தலைமையில் நடைபெற்றது.

100 பனை விதைகள் விதைக்கப்பட்டது. மாநில மரம் பனை, மாநில நலம் காப்பது மாநில வளம் நீர் நிலை ஆதார வளம், நிலத்தடி நீர் சேமிப்பு, கரைகளில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுப்பது .கரைகளை உடையாமல் வலிமையாய் காப்பது பனையாகும்.
குளிர்ச்சி தரும் நுங்கு , பதனீர், கருப்பட்டி, நாட்டுச் சக்கரை, பனை ஓலைகளில் எண்ணற்ற கைவினைப் பொருட்கள், பனை நார்களில் கட்டில், கயிறுகள் உள்ளிட்ட பொருட்கள், பனை ஓலைகளில் குடிசை, வேலி, என தற்சார்பு வாழ்வியல் பொருளாதாரத்தின் அடையாளமாகத் திகழ்வது பனை .இயற்கை சூழலைத் தாங்கி தட்பவெப்பங்களை சரி செய்யக் கூடியது, புயலாலும் சாய்க்க முடியாத மரம். புயல் காற்றை தடுத்து வேகத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட பனை மரங்களை பாதுகாத்து வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் பனை விதைப்பு நடைபெற்றது.தொடர்ந்து அக்டோபர் 20 வரை பனை விதைப்பு நடைபெறும்.

2 full

இந்நிகழ்வை தண்ணீர் அமைப்பின் இணைச் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆர்.கே. ராஜா, தனலட்சுமி பாஸ்கரன், மக்கள் சக்தி இயக்க மகளிர் அணி செயலாளர் குண்டூர் லலிதா, என். தரணி, சாத்தனூர் மாரி, தமீம், என்.வெங்கடேஷ், சரண்பாரதி, எம்.நரேஷ், என்.தயானந்த்,உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.