தொலைநோக்கு..

சோனி நிறுவன வளர்ச்சியின் ஆதாரம்...

0
1

 

 

1955 ல் நாங்கள் உருவாக்கிய முதல் டிரான்ஸிஸ்டர் ரேடியோ சிறியது தான். ஆனால் நாங்கள் அது பற்றிய பெருமித உணர்வுடன் இருந்தோம்.

அமெரிக்கா இயற்கையான மார்க்கெட் போல எனக்குத் தோன்றியது. வர்த்தகம் செழித்துக் கொண்டிருந்தது. வேலை வாய்ப்புகள் உயர்ந்த நிலையில் இருந்தன. மக்கள் முற்போக்கு எண்ணங்களுடன் இருந்தார்கள். புதியவற்றை விரும்பி வரவேற்றார்கள். சர்வதேசப் பயணம் சுலபமாகிக் கொண்டிருந்தது.

2

நான் இன்னொரு அமெரிக்க விற்பனை யாளரைச் சந்தித்தேன். அவருக்கு எங்கள் ரேடியோ மிகவும் பிடித்திருந்தது. அவருடைய கம்பெனிக்கு 150 விற்பனை நிலையங்கள் இருந்தன. பெரிய எண்ணிக்கையில் எங்களுடைய ரேடியோ தேவைப்படும் என்று சொன்னார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன்னுடைய கம்பெனியின் பெயரை எங்கள் ரேடியோ மீது பொறிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. ஐயாயிரம் ரேடியோக்களுக்கு, 10, 000 ரேடியோக்களுக்கு, ஒரு லட்சம் ரேடியோக்களுக்கு என்று வகைப் படுத்தி அவற்றின் அடிப்படையில் என்ன விலைக்குத் தர முடியும் என்று கொட்டேஷன் கொடுக்கச் சொன்னார். புலோவாவிடம் இழந்த வாய்ப்பு திரும்ப கிடைத்து விட்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.

என்னுடைய ஓட்டல் அறைக்குத் திரும்பியவுடன் அவ்வளவு பெரிய ஆர்டரை பூர்த்தி செய்யும் திறமை எங்களுடைய தொழிற்சாலைக்கு இருக்கிறதா என்று யோசிக்கலானேன். இப்போது டோக்கியோவில் எங்கள் தொழிற்சாலை வசதியாக பெரிய இடத்தில் செயல்படுகிறது என்பது உண்மை தான்.

ஒரு வருஷத்தில் ஒரு லட்சம் ரேடியோக்களை தயாரிக்கின்ற சக்தி எங்கள் தொழிற்சாலைக்கு இருக்கவில்லை. தவிர, ரேடியோ தவிர வேறு சாதனங்களையும் நாங்கள் தயாரிக்க வேண்டி இருந்தது. ஒரு மாதத்தில் பத்தாயிரத்துக்கும் குறைவான ரேடியோக்களைத் தான் எங்களால் தயாரிக்க முடியும். ஒரு வருஷத்தில் ஒரு லட்சம் ரேடியோக்களுக்கான ஆர்டரை நாங்கள் பூரத்தி செய்ய வேண்டும் என்றால் எங்கள் வசதிகளை பெருக்க வேண்டியிருக்கும். இன்னும் அதிகம் பேரை வேலைக்கு வைக்க வேண்டியிருக்கும். விளைவாக அதிக முதலீடு செய்ய வேண்டியும் இருக்கும். இதெல்லாம் சூதாட்டம் ஆகிவிடாதா?

4

எனக்கு அனுபவம் குறைவு தான். என்னிடம் புத்திசாலித்தனம் இருந்தது. எல்லா நிலைமைகளையும் சீர்தூக்கிப் பார்த்தேன். கணக்குப் போட்டுப் பார்த்தால் ரேடியோ உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிக்கும் போது அதன் விலையையும் கூடுதலாக்க வேண்டி இருக்கும் எனத் தோன்றியது.

இது கொஞ்சம் வேடிக்கை யான கணக்கு போலத் தோன்ற லாம். முதலாண்டில் ஒரு லட்சம் ரேடியோக்களுக்கு ஆர்டர் கிடைத்த பிறகு அடுத்த ஆண்டும் அதே போன்ற பெரிய ஆர்டர் கிடைக்காவிட்டால் நாங்கள் கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டு விடுவோம். எதிர்பார்த்து விரிவாக்கிய அமைப்பின் செலவு கூடிவிடும். வேலைக்கு வைத்த அதிகப்படியான ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். ஆகவே இருக்கின்ற அமைப்பை விரிவுபடுத்துவது அவ்வளவு சுலபமாக எனக்குத் தோன்றவில்லை.

வேண்டிய போது தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, வேண்டாத போது அவர்களை வெளியே அனுப்புவது ஜப்பானில் சாத்தியமில்லை. ஊழியர்களோடு நாங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தம் நீண்ட தவணையில் உருவாக்கப்பட்டது. அவர்களும் எங்களை விட்டு திடீரென்று விலகமாட்டார்கள்.

ஒரு லட்சம் ரேடியோக்களுக்கு ஆர்டர் கிடைப்பதை எண்ணி விலையை நான் குறைத்துச் சொல்லிவிட்டால் வாங்குகின்றவர் ஒரு லட்சம் எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டு ஆரம்பத்தில் பத்தாயிரம் போதும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்ளுகிறேன் எனச் சொல்லி விட்டால் நிலைமை மோசமாகிவிடும்.
மறுநாள் விற்பனையாளரிடம் போனேன். கொட்டேஷனைக் கொடுத்தேன். அவர் என்னைப் பார்த்து திருதிருவென்று விழித்தார். நான் கொடுத்த காகிதத்தை மேசையின் மேல் வைத்து விட்டு என்னைப் பார்த்துச் சொன்னார்.

‘மிஸ்டர் மொரிடா.. நான் பொருள்களை வாங்கி விற்கும் ஏஜென்டாக முப்பது வருஷங்களாக வேலை பார்த்து வருகிறேன். பொருள்களை நான் அதிகமாக வாங்கினால், அதன் விலையும் அதிகமாகும் என்று சொன்ன முதல் ஆள் நீங்கள் தான்.
நான் காரணத்தை விளக்கினேன். நான் சொல்லுவதை அவர் கவனமாக கேட்டுக் கொண்டு இருந்தார். பிறகு என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். பத்தாயிரம் ரேடியோக்களுக்கு ஆர்டர் செய்தார். அந்த நிலையில் அதன் விலை எங்கள் இரண்டு பேருக்குமே நியாயமானதாக இருந்தது.

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட சோனி நிறுவனம் வளர்ந்த கதை புத்தகத்திலிருந்து.. நிறுவனர் அகியோ மொரிடோவின் சுயசரிதம்

3

Leave A Reply

Your email address will not be published.