நண்பேன்டா !!! வெற்றிப் பாதையில் ரைட் நவ், திருச்சி

0
1

2013ம் ஆண்டு..! கல்லூரி முடித்த பிறகு ஏதேனும் செய்ய வேண்டும். நேரத்தையும், காலத்தையும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள குடும்பத்தை நாம் தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய அப்பு தனது நண்பர்களான ஜீவா, கௌதம், தினேஷ்குமார், சிவா ஆகியோரிடம் தனது யோசனை தெரிவித்து உள்ளார்.

அப்புவின் நண்பரான ஜீவா பெங்களுருவில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளருடன் பழக்கம் வைத்திருப்பதை அறிந்து நாமும் துணி வியாபாரம் செய்வோம் என்று முடிவெடுக்கிறார் அப்பு மற்றும் அவரது நண்பர்கள்.
கல்லூரி முடித்த உடனே முதல் முயற்சியாக அனைவரிடமும் அப்போது இருந்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து 10 ஆயிரம் ரூபாய்க்கு முதலில் ஆண்கள் அணியக் கூடிய துணிகளை பெங்களுரில் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

துணியும் வந்துவிட்டது. இதை எங்கு வைத்து வியாபாரம் பண்ணுவது என்ற யோசனை ஏற்பட்டது போது அவரது நண்பரான கௌதம் தன்னுடைய வீட்டு மாடியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூற, கௌதம் வீட்டு மாடியில் முதலில் 10 ஆயிரம் ரூபாய்க்கான பொருளை வைத்து வியாபாரத்தை தொடங்குகின்றனர்.

தங்களது பிற நண்பர்களை தொலைபேசியில் அழைத்து துணி வாங்க வேண்டும் என்றால் எங்களை அணுகவும் என்று போனிலேயே விளம்பரத்தை தொடங்குகின்றனர். முழுக்க முழுக்க அவர்களுடைய நண்பர்களை மட்டுமே தீர்மானித்து இந்த தொழில் தொடங்கப்படுகிறது. நண்பர்களும் வந்து பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். ஓரளவு விற்பனை நடந்தது.

2

இனி மொட்டை மாடியை தாண்டி அடுத்த கட்டத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று யோசித்தவர்கள், கட்டைப் பையில் புதுத் துணிகளை எடுத்துக் கொண்டு வீதிவீதியாக சென்று கூவி கூவி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு அவர்கள் எவ்வித கூச்சமும் படவில்லை அவர்களுடைய நோக்கம் தொழிலில் எப்படி வெற்றி பெறுவது என்று மட்டுமே.!

அந்த சமயத்தில் தான் தீபாவளி வந்தது. தீபாவளிக்கு பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து ஒரு லட்சம் ரூபாய்க்கு பெங்களூரில் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

அப்படியாக தீபாவளி வியாபாரமும் வெற்றியடைய, கடையை விரிவுபடுத்த எண்ணி திருவானைக்கோவில் பகுதியில் இருக்கக்கூடிய நண்பரின் உதவியுடன் கடை ஒன்றை வாடகைக்கு பிடிக்கின்றனர். இரண்டு வருடம் அங்கு வியாபாரம். இந்நிலையில் திருச்சி, மேலபுலிவார்டு சாலையில் உள்ள தேவர் ஹால் ஷாப்பிங் காம்ப்ளக்சில் ஒரு கடை வாடகைக்கு இருப்பதை அறிந்தனர்.

சிங்காரத்தோப்பிற்கு துணி வாங்க வருகிறவர்கள் நம் இடத்திற்கு வரச் சொல்வது எளிது என்று முடிவெடுத்து தேவர் ஹாலில் ‘ரைட் நௌ’ என்ற பெயரில் ஆண்களுக்கான ஆடைகள் விற்கும் கடையை தொடங்குகின்றனர்.

சரியான நேரத்தில், சரியான பாதையில் ஒற்றுமையுடன் பயணத்தை தொடங்கியவர்களுக்கு இன்று ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளனர்.
இலக்கு.. அதை அடைய தளர்வில்லாத பயணம்.. நிச்சயம் வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம் ரைட் நவ்..!

3

Leave A Reply

Your email address will not be published.