நெய் சாப்பிட்டால் கொழுப்பேறுமா..?

0
Full Page

பெரும்பாலான மக்கள் நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை அதிகரிக்கும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன் உணவில் நெய்யை தவிர்த்து வருகின்றனர். ஆனால் ஆயுர்வேதத்தில் நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

பசு மாட்டிலிருந்து கறந்த பாலில் தயாரிக்கப்பட்ட நெய் மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளஞ்சூடான உணவுகளில் மட்டுமே நெய் கலந்து சாப்பிட வேண்டும். சுத்தமான பசு நெய் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படாது என்கிறது ஆயுர்வேதம்.

Half page

உணவில் நெய் சேர்ப்பதால் ரத்தக் கொழுப்பு குறைகிறது. வாயுவினால் ஏற்பட்ட வலி தீர்கிறது. பித்த சம்பந்தமான நோய்களுக்கு நெய் மிக முக்கியமான மருந்து. வாதம், நஞ்சு, மனக் கலக்கம், உடல் வறட்சி, முகத்தில் தெளி வின்மை, காய்ச்சல் ஆகிய வற்றை நெய் நீக்கும். மார்புவலி, உடல் இளைப்பு, அக்கி என்னும் தோல் நோய், ஆயுதம், நெருப்பு இவற் றால் துன்புற்ற உடல் போன்றவற்றுக்கும் சிறந்தது.

நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவ குணம் வாய்ந்த பொருள். அறிவு, ஞாபக சக்தி, நுண்ணறிவு, ஜீரண சக்தி, பலம், ஆயுள், விந்து, கண்பார்வை இவற்றை அதிகரிக்கும். சிறுவர், முதியோர், மகப்பேறு, உடல் ஒளி, மிருதுத் தன்மை, குரல் இவற்றுக்குச் சிறந்தது. இத்தனை நல்ல பலன்களை தரும் சிறந்ததோர் உணவான நெய்யை கொழுப்பு என ஒதுக்காமல் உணவுடன் சேர்த்து நல்ல பலன்களை பெற வேண்டும்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.