தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் – திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

1
full

சமீபத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு பேசும் போது, ‘தரைகடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகள் சுயசார்பு நிதியில் வங்கிகள் மூலம் தலா ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படவுள்ளது.

பதிவு செய்யப்பட்ட தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளிடமிருந்து மாநகராட்சியின் மூலம் பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு அனைத்து வங்கிகளும் விரைவில் கடன் வழங்க வேண்டும்.

ukr

பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்காக மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடத்தி கூடுதலான மனுக்களை பெற வேண்டும். தரைக்கடை வியாபாரி களுக்கு கடன் வழங்க விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

poster

கடன் பெற விரும்பும் வியாபாரிகள் அந்தந்த பகுதியிலுள்ள மாநகராட்சி கோட்ட உதவி ஆணையர்களை அணுகி மனு அளிக்கலாம். மேலும் மகளிர் திட்ட அலுவலர்களையும் அணுகி மனு அளிக்கலாம். கடன் பெற்றவர்கள் ஒரு வருட காலத்திற்குள் அதனை திரும்ப செலுத்த வேண்டும்‘ என்றார்.

ரைட்.. ரைட்..
வண்டிய வேகமா தள்ளுப்பா..!

half 1
1 Comment
  1. discount mlb jerseys China says

    Appreciating the persistence you put into your website and detailed
    information you provide. It’s nice to come across a blog every once in a while that isn’t
    the same out of date rehashed information. Great read!
    I’ve saved your site and I’m adding your RSS feeds to my Google account.discount mlb jerseys Chinahttp://www.c9wiki.com/link.php?url=http://r3eogkh977.booklikes.com/post/3299729/5-real-life-lessons-about-cheap-football-jerseyshttp://www.arakhne.org/redirect.php?url=https://telegra.ph/the-most-common-wholesale-indianapolis-colts-jerseys-2020-debate-isnt-as-black-and-white-as-you-might-think-09-27

Leave A Reply

Your email address will not be published.