வேகத்தை தவிர்ப்பீர் விவேகத்துடன் இருப்பீர்

0
1

வேகத்தை தவிர்ப்பீர் விவேகத்துடன் இருப்பீர்

வாகன ஓட்டுனர்களுக்கு இனிப்புடன் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தன்னார்வலர்கள்

திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறை மற்றும் நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரியமங்கலம் பகுதியில் வாகன வேகத்தை குறைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

2

திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழில் 13 செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு வேகக்கட்டுப்பாட்டு குறித்து இடம் பெற்றது அதன் அடிப்படையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகரன் தலைமை வகித்தார்.
திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் இரண்டு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 30 கிலோ மீட்டர் வேகத்திலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை 40 கிலோ மீட்டர் வேகத்திலும் வாகனங்களை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநர்களுக்கு இனிப்பு வழங்கியும் வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டியும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

துணைஆணையர் வேதரத்தினம்,
திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், திருச்சி வடக்கு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் விக்னேஸ்வரன்,
தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் முருகேசன் உட்பட பலர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.