நடிகர் திலகம் சிவாஜிக்கு பாரத ரத்னா விருது: ரசிகர்கள் கோரிக்கை

0
D1

நடிகர் திலகம் சிவாஜிக்கு பாரத ரத்னா விருது:
ரசிகர்கள் கோரிக்கை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானாவில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

N2

உலகமே போற்றிய உன்னத கலைஞரான சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசு உடனடியாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர்.
சோழ மண்டல சிவாஜி பாசறை மாவட்ட தலைவர் சதா. வெங்கட்ராமன் தலைமையில் ரசிகர்கள் ராமநாதன் ரவுண்டானாவில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

D2

“ ‘செவாலியே’ விருது பெற்றவரும் , உலகமே போற்றிய உன்னத கலைஞரான சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும். சென்னை மெரீனா கடற்கரையில் மீண்டும் சிவாஜி சிலையை நிறுவ வேண்டும். திருச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக திறக்கப்டாமல் மூடிவைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை உடனடியாக திறக்க வேண்டும்,” என்றார் சதா. வெங்கட்ராமன். அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர்; பாஸ்கர் தலைமையில் ரசிகர்கள் ‘செவாலியே’ சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அன்பரசன் தலைமையில் நகர நிர்வாகிகள் அலாவுதீன், பூபதி உள்ளிட்டோர் சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

N3

Leave A Reply

Your email address will not be published.