நோய்களை கொல்லும் மலை

0
1

கொல்லிப்பாவை என்ற அம்மன் இந்த மலையை பாதுகாக்கிறாள் என்ற நம்பிக்கை உள்ளதால். இந்த மலைக்கு கொல்லிமலை என்று பெயர் பெற்றது. கொல்லிப்பாவையை இம்மலை வாழ் மக்கள் எட்டுக்கை அம்மன் என்றும் கூறுகின்றனர்.

அதேபோன்று கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையாதாலும், மும் மரங்களையும், முனைப்பையும் கொல்லுவதால் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என சொல்வதுண்டு. நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு கொல்லி வாய்ப் பறவைகள் அதிகம் இருந்ததால் இது கொல்லிமலை என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

கொல்லிமலை என்றாலே இயற்கை எழில் கொஞ்சும் மலை என்று நம் அனைவருக்கும் நினைவுக்கு வந்தாலும், இது ஒரு சிறந்த சுற்றுலாதளம். அதையும் தாண்டி இம்மலை மீது குடிகொண்டுள்ள சைவ வழிபாட்டு தளமான அறப்பளீஸ்வரர் கோயிலும், காவல் தெய்வமாக கருதப்படும் மாசி பெரியண்ணன் கோயிலும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும்.

2

கொல்லிமலை சிறப்புகள்
இம்மலையில் விளையும், மா, பலா, வாழை, கொய்யா, அன்னாசி போன்ற மலைப் பழங்களும், இங்கு நிறைந்துள்ள மூலிகைகளும், இங்கு மிக முக்கிய உற்பத்தி என்றால் மிளகு, பூண்டு, காப்பி மட்டுமே. மேலும் இம்மலையில் விழும் அருவிகள், ஓடும் ஆறுகள் அழகிற்கு அழகு மேம்பட்டதோடு, இங்கு வாழும் பறவைகள், அரிய வகை கரடி, மான், மயில், காட்டுபன்றி, பாம்புகள், குரங்குகள் உள்ளிட்டவைகளின் பாதுகாவலனாகவும் இம்மலை இருக்கிறது. மேலும் இம்மலை மீது வாழும் மலைவாழ் மக்கள் அவர்களின் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட அரிய வகை தகவல்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த சிறப்பு கட்டுரைவெளியிடப்படுகிறது.

கொல்லிமலையின் அற்புதங்கள்
கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அவ்வாறின்றி தொடர்ந்தும், அடர்ந்தும் காணப்படும். பற்பல நதிகள் இந்த கிழக்கு தொடர்ச்சி மலையை வளப்படுத்தி ஓடுவதால் மூலிகைகள் அதிகம் விளைந்துள்ளது. கொல்லிமலையில் கொடிய நோய்களுக்குமான அற்புத மூலிகைகள் கொண்டு அழகுற விளங்குகிறது
நாமக்கலில் இருந்து 55 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமுள்ள இம்மலை வடக்கு, தெற்காக 28 கி.மீ பரப்பளவும், கிழக்கு மேற்காக 19 கி.மீ பரப்பளவும் கொண்டது. மொத்தத்தில் 441.4 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது.
கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம் கிராமப்புறங்களிலிருந்தும், சேலம் நகரத்திலிருந்தும் அரசுப் பேருந்து, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி மினி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மலைப்பாதையின் தூரம் 26 கி.மீ செங்குத்தான இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால், அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும், பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயகரமானது. எனவெ பயிற்சி பெற்ற ஓட்டுனர்களே பேருந்துகளை இயக்க முடியும்.

இம்மலைப்பாதை மழைக்காலத்திற்கு ஏற்றதன்று. 2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயகரமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடைவடிக்கை எடுத்து வருகிறது. கொல்லிமலைக்கு செல்ல முக்கியமாக இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நாமக்கல் சேந்தமங்கலம் வழியாகவும், கோம்பைகாடு எனும் ஊர் வழியாக செல்ல வேண்டும்.

கோம்பையிலிருந்து 12 மைல் தூரம் சென்று அரப்பளீஸ்வரர் சுவாமி கோயிலை அடையலாம். மற்றொன்று கொப்பம்பட்டி, வைரிசெட்டிப்பாளையம் வழியாக புளியஞ்சோலை சென்று அங்கிருந்து 5 மைல்தூரம் சென்றபின் மலையோரம் தரை மட்டத்தில் இருந்து 2 மைல் சென்று அறப்பளீஸ்வர சுவாமி கோயிலை அடையலாம்.

இம்மலை சுமார் 40 சதுர மைல் (280 சதுர கி.மீ) நிலப்பரப்பும் கொண்டது. இங்கு 5,000க்கும் மேற்பட்ட மக்கள் 85 கிராமங்களில் வசித்து வருகிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் கொல்லிமலை இயற்கை அழகுடனேயே விளங்குகிறது.

கொல்லிமலையில் இருந்து, சுவேதா ஆறு, கோம்பை ஆறு, அய்யாறு, கட்டாறு, கருவோட்டாறு, கல்லங்குழியில் பஞ்சநதி போன்ற ஆறுகள் உற்பத்தியாகி, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளை நிரப்பி காவிரி ஆற்றில் கலக்கிறது. கொல்லிமலையில் நீர் ஊற்று நிறைந்த இடங்கள் அதிகம் காணப்படுகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகில் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி உள்ளது.

இங்கு செல்ல 720 படி கட்டுகள் உள்ளன. தமிழக சுற்றுலாத்துறை இவற்றை அமைத்தது. 160 அடி உயரத்திலிருந்து நீர் வீழ்ச்சி விழுகிறது. அதில் குளித்தால் நோய்கள் தீரும் என்றும், உடல் ஆரோக்கியம் பெறுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து வெளியேறும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.

கோயிலுக்கு முன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நீரோடை உள்ளது. அந்த காலத்தில் நீரோடையில் ஏராளமான மீன்கள் துள்ளி குதித்து விளையாடியதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தை வரம் வேண்டி, மீனை பிடித்து அதன் மூக்கில் தங்க கம்பியை பொருத்துவார்களாம். அப்படி செய்பவர்களுக்கு அந்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிட்டியது எனவும் கூறப்படுகிறது.


மலைவாசிகள் அறப்பளீஸ்வரரை குல தெய்வமாக வணங்குகிறார்கள். மைசூர் சுவாமிகள் என்று அழைக்கப்படும், நாகநந்த யோகியின் சாமி கோயிலுக்கு மேற்கில் இருக்கிறது. கோயிலுக்கு வடக்கில் பஞ்சநதி ஆறு ஓடுகிறது.

காடுகளும், சோலைகளும் நிறைந்த அப்பகுதியில், கோயிலுக்கு நேர் கிழக்கு பகுதியில் ½ மைல் கீழே பயங்கரமான பாவை வழியாக இறங்கிப் போனால் 160 அடி உயரத்திலிருந்து ஆகாய கங்கை அருவி விழுவதைக் காண முடியும்.

அந்த அருவி நீர் பாயும் ஓடை வழியாகச் சென்றால் ஒரு சிறு செங்குத்தான குன்றும், அதனுள் ஒரு குகையையும் காணலாம். இது கோரக்கர் குகை என அழைக்கப்படுகிறது. குகை பக்கத்தில் தென் பகுதியில் ஒரு அகழி இருக்கிறது.

இது கோரக்கர் குண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு கோரக்கர் என்ற சித்தர் தன் மாணவர்களுடன் கூடி தவம் இருந்ததாகவும், அங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன.
அங்கிருந்து கிழக்கு நோக்கி 2 மைல் சென்றால் அங்கு ஒரு குன்றின் மீது பெரியண்ணன் சுவாமி கோயில் உள்ளது.

தரைமட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் பழைய காலத்து குயவன் மண் ஓடுகளால் கோயிலும், மண்ணால் செய்யப்பட்ட பகுதியை சிலையில் அமர்ந்து கையில் திரிசூலம் ஏந்தி வேட்டைக்குச் செல்லும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பல சித்தர்கள் வாழந்தார்கள் இன்னும் சித்தர்களை காணலாமென பேசப்படுகிறது. இங்கு ஒளவையார் முதல் 18 சித்தர்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இதற்கு ஆதாரமாக குகைகளும் காணப்படுகிறது.

சித்தர்கள் இங்குள்ள மூலிகைகளின் பயனை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனராம். நவபாஷான சிலைகள், மற்றும் விலை மதிப்பற்ற கற்களும் இம்மலையில் இன்றும் காணப்படுகிறது.
மூலிகைகள் தவிர சித்தர்களால் தயார் செய்யப்பட்ட பல அரிய மருந்துகள், தைலம், ரசமணி, மூப்பு, சுண்ணம் இவைகள் கல்லறைகளில் புதைபொருளாக வைக்கப்பட்டிருப்பதாக காலங்கி நாதம், மலைவளம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதாம்.

இந்த மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் வேல் கம்பியால் தாக்கப்பட்ட புண்ணையும் ஆற்றவல்ல மூலிகை சவால்யகரணி, துண்டிக்கப்பட்ட பாகங்களை ஒன்று சேர்க்கும் சந்தாண கரணி, லேகாதி விருட்சகம், சாயா விருட்சகம், அழகுண்ணி, தொழுகண்ணி போன்ற அரிய வகை மூலிகைகள் இங்கு மட்டும் காணப்படுகிறது.

இம் மூலிகைகளுக்கும், அரிய மருந்துகளுக்கும் காவலாக கொல்லிப் பாவை, பெரியண்ண சுவாமி என்னும் தெய்வங்களை அமைத்து வைத்திருப்பதாக சித்தர் நூலால் அறியப்படுகிறது.

ஐம்பெரும் காப்பியங்கள்
வரலாற்று குறிப்புகளாக பழந்தமிழ் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு உள்ளிட்டவைகளிலும் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இம்மலையும், மலை சார்ந்த கிராமத்தையும், கி.பி. 200-ல் ஓரி என்ற அரசன் ஆட்சி புரிந்ததாக வரலாறுகளில் காணப்படுகிறது.

இவனது மகள் தான் கொல்லிப்பாவை. இவர் அழகில் சிறந்தவர், புறநானூற்றில் இவளைப் பற்றி பல பாடல்களில் சிறப்பாக கூறப்படுகிறது.

ஓரி நாமக்கல், ராசமாபுரமாகிய ராசிபுரம், கொல்லிமலை ஆகிய பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

ராசிபுரத்திலுள்ள சிவன்கோயிலும், கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயிலும் ஓரி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவையாகும். இங்கு வல்வில்ஓரிக்கு சிலை உள்ளது

ஆண்டு தோறும் இச்சிலைக்கு விழா எடுக்கப்படுகிறது. மறவர் குடியை சேர்ந்தவன் ஓரி என வரலாற்றுச் சான்றுகள் கூறுகிறது.
அறப்பள்ளீஸ்வரர் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் அய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது.

இதற்கு மீன் கோயில் என்றும் கூறப்படுகிறது. ஏன் இப் பெயரென்றால் அறப்பள்ளி ஈஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இப் பெயர் பெற்றது. இங்கு வரும் பக்தர்கள் அய்யாற்றில் நீராடி அறப்பளீஸ்வரரை தரிசனம் செய்வர்.

இக்கோயிலுக்கு அருகில் மீன் பள்ளியாறு ஓடுகிறது. இங்கு இறைவன் மீன் வடிவில் விளங்குவதாக ஐதீகம் உண்டு. எனவே மீன்களுக்கு உணவுகள் வழங்கும் வழக்கம் இன்றும் உள்ளது. கொல்லிமலைக்கு வேறு பெயராக சதுரகிரி என்ற பெயரும் உண்டு. இங்கு அப்பர், சம்பந்தர் ஆகியோரும் பாடியுள்ளனர்.

இங்கு படகு சவாரி தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வாசலூர்பட்டியில் உள்ளது. இங்கு மிகப் பெரிய மூலிகைப் பண்ணையும், வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. மா, பலா, கொய்யா, அண்ணாசி போன்ற பழ வகைகள் சந்தை உள்ளது. இந்த சந்தை கோளக்காடு என் இடத்தில் உள்ளது.

வாசலூர்பட்டியில் உள்ள பூங்காவில் 87 வகையான மூலிகைகள் உள்ளன. மேலும் இங்கு நோகா திட்டம். மூங்கில் காடுகளின் தோற்றம், இயற்கை புல்தரைகள் மிகவும் சிறப்பானவை, மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் தக்க பசுமை குடில்கள் காட்சி கோபுரம் உள்ளது.

-கே.எம்.ஆர்

3

Leave A Reply

Your email address will not be published.