ஆர்மோனியம் டி.எம். காதர் பாட்சா

0
1

கர்நாடக இசை உலகில் ஒரு இஸ்லாமியர் கொடிகட்டிப் பறந்த வரலாற்றை உருவாக்கியவர் உறையூர் டி.எம்.காதர் பாட்சா ஆவார்.

பின்பாட்டுக்காரராகக் கச்சேரி செய்து கொண்டிருந்த மொகிதீர்ஷா என்பவருக்கு 1885இல் இவர் மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர். உறையூர் இசைப் புலவர் நடேசம்பிள்ளையிடம் இவர் பிடில் ஆர்மோனியம் இரண்டையும் பயின்று தேர்ந்தார். இளமையிலேயே இசை ஞானமும் சாரீர வளமும் இவருக்கு இயற்கையாக அமைந்திருந்தன. தனது 10வது வயதிலேயே பரமக்குடி டி.எஸ். அரங்கசாமி ஐயங்காரின் தென்னிந்திய ராயல் டிராமேடிக் கம்பெனியில் சேர்ந்தார்.

13 ஆண்டுகள் மாதம் 75 ரூபாய் சம்பளத்தில் ஆர்மோனிய பின்பாட்டுக்காரராகக் கச்சேரிகளில் கலந்து கொண்டார்.
இக்காலக்கட்டத்தில் அய்யங்கார் கம்பெனிக்கு காதர் பாஷாவால் பணமும் புகழும் குவிந்தன. ராமநாதபுரத்து ராஜாவும் இலட்சாதிபதி மண்டபத்து மரைக்காயரும் அடிக்கடி வந்து இவர் பாடல்களை ரசித்து பரிசுகள் பல வழங்கியுள்ளனர்.

2

1908ஆம் ஆண்டிற்குப் பிறகு பல ஸ்பெஷல் நாடகக் கம்பெனிகள் இவரை போட்டிபோட்டுக் கொண்டு அழைத்தனர். நாடகங்களை விட காதர் பாஷாவின் ஆர்மோனிய பின்பாட்டைக் கேட்கவே மக்கள் திரண்டு வந்தார்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இவரது குரல் ஒலி்த்தது. கடல் கடந்து மலேசியா, ஜோகூர் சுல்தான் அரசவையிலும் இரங்கூன் நகரத்திலும், இலங்கையின் வீதிகளிலும் ஒருமுறை அல்ல பலமுறை இவரது கான இசை மழை பொழிந்துள்ளது. இதற்காக இவர் பெற்ற பரிசுகளும், பாமாலைகளும் ஏராளம், ஜோகூர் சுல்தான் மலேசிய நகரின் ராஜ வீதிகளில் கோச்சு வண்டியில் இவரை அமர வைத்துப் பவனி வரச் செய்து தங்கப் பதக்கங்கள் தந்து பாராட்டியுள்ளார்.

கல்கத்தாவில் ஹிம்மாஸ்டர்ஸ் வாய்ஸ் என்ற இசைதட்டுக் கம்பெனி இவரது 200 பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்து ஆயிரக்கணக்கில் விற்பனை செய்தது. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் இவரது இசைத்தட்டுப் பாடல்களைத் தொடர்ந்து ஒலிபரப்பியுள்ளது. உடுமலை முத்துசாமி கவிராயர் இவருக்கு ஒரு பாமாலையும் பாடியுள்ளார்.

அரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், புதுக்கோட்டை கஞ்சிரா மான்பூண்டியாபிள்ளை, கஞ்சிரா தட்சிணாமூர்த்திபிள்ளை, தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், கருப்பையா, பாகவதர் போன்ற இசையுலக மேதைகள் இவரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தனர்.

இவர் முருகன் மீது பாடும் “சுருளிமலை மீது மேவும் சீலா” என்ற பாடல் அக்காலத்தில் தமிழகமெங்கும் ஒலித்தது. பொதுவாக இவர் முருக பக்தர் போன்றே முருகன் பாடல்களைப் பாடி பரவசமூட்டியவர் இருப்பினும், மக்கம் பிறந்த நபிக்கான தூதரே போன்ற இஸ்லாமிய பாடல்களையும் இவர் உணர்ச்சி மேலிடப் பாடியுள்ளார். கம்பம் பீர்முகமது பாவலர், உறையூர் சையது இமாம், புலவர், மதுரை பாஸ்கரதாஸ் போன்றோர் பாடல்களையும், திருப்புகழ் போன்ற தமிழ் இசைப் பாடல்களையும் இவர் பெரிதும் விரும்பிப் பாடியுள்ளார்.

பக்திப் பாடல்கள் மட்டுமின்றி சுதந்திர உணர்ச்சி மேலிடும் தேசியப் பாடல்கள் மட்டுமின்றி சுதந்திர உணர்ச்சி மேலிடும் தேசியப் பாடல்களையும் பாடி விடுதலை உணர்வினையும் மக்களிடம் ஊட்டி வந்தவர் காதர் பாட்ஷா.

இவரது இசைப் புலமையைப் பாராட்டி, கரவே-கரவே ஆர்மோனிய சக்ரவர்த்தி என்று பாராட்டப்பட்டவர். கல்கத்தாவில் ஒரு இசை நிகழ்ச்சியில் இவரது இசையில் மயங்கிய ஆங்கிலேயர்கள் பலர் தொப்பியை கழற்றி தங்களது மரியாதையைச் செலுத்தி வணங்கியுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.