பாதர் பேட்டை வி.அ.முத்தையா

திருச்சியின் அடையாளங்கள்-26

0
1

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி, மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்ளை “நம்ம திருச்சி வார இதழ்” மூலம் திரும்பிப் பார்ப்போம்.


இந்தவாரம் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கிய பாதர் பேட்டை வி.அ.முத்தையா பற்றி பார்போம்.

1914இல் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் அருகில் உள்ள பாதர்பேட்டை கிராமத்தில் பிறந்தவர். இளம் வயது முதற்கொண்டே காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டு சுதந்திர போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1942-ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். நாடு விடுதலைபெற்ற பின்னர் இவர் துறையூர், முசிறி பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டுள்ளார்.

2

பெருந்தலைவர் காமராஜரின் அன்புக்குப் பாத்திரமானவர். தியாகி டி.எஸ்.அருணாசலத்தின் நெருங்கிய நண்பர். 1948 இவர் ஜில்லா போர்டு உறுப்பினராகவும், 1952இல் ஜில்லா போர்டு துணைத் தலைவராகவும், இருந்துள்ளார்.

1956இல் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவராகவும், 1962 முதல் 1968 வரை சிட்டி கிளப்பின் தலைவராகவும், 1963இல் அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1954இல் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி பொதுக் காரியதரிசியாகவும் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் இவர் செயல்பட்டார்.

1957ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலிலும், 1962 தேர்தலிலும் வென்று சட்டமன்றத் தொகுதியிலும் 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இவர் பணியாற்றிய காலத்தில் இவரது தொகுதியில் பல கிராமங்களுக்கு முதன்முதல் மின்சாரம் கொண்டு வந்த பெருமைக்குரியவர். கிராமங்களின் முன்னேற்றத்தில் இவர் ஆற்றிய சாதனைகள் இன்றும் மக்களால் பேசப்படுகின்றன.

இவர் வாழ்ந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு முத்தையா பாளையம் என்று போற்றப்படுகின்றது. 1968ல் இவர் மரணமடையும் வரையில் இவர் வாழ்ந்த பகுதியில் மக்களுக்காக அரும்பணியாற்றி வந்தார்.

ஒருங்கிணைந்த திருச்சியின் அடையாளங்களின் பற்றின முந்தைய தொகுப்புகளை ஆன்லைனில்
ntrichy.com இணையதளத்தில் பார்த்து படித்து கொள்ளலாம்

3

Leave A Reply

Your email address will not be published.