திருச்சி டூரிஸம்

0
1

மில்லேனியம் பார்க் – திருச்சி மான் பூங்கா

புத்தாயிரம் பூங்கா, திருச்சிராப்பள்ளி பாரத மிகு மின் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ளது. திருச்சி மக்களுக்கு அழகிய பொழுதுபோக்குப் பூங்கா. இது, ஓய்வுபெற்ற பெல் (BHEL) ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. வார நாள்களில் மாலை நேரங்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு வரைக்கும் திறந்திருக்கும். உள்ளே பறவைகள் பெட்டகம், மான் கூட்டவெளிகள் இவற்றுடன் குட்டி ரயிலும் இருக்கிறது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா

2

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுட்டிகளுக்கான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்று, வண்ணத்துப்பூச்சி பூங்கா. ஸ்ரீரங்கத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது. காவிரி மற்றும் கொள்ளிடம் கரையில், இயற்கை அழகுக்கு மேலும் அழகுச் சேர்க்கும் வகையில் காற்றில் படபடக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா இது. எட்டு கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டை செய்த கோட்டை

\மலைக்கோட்டை அடிவாரத்தில் இருக்கும் தெப்பக்குளம், குறிப்பிடத்தக்கது. தெப்பத் திருவிழாவை அடுத்து, மக்கள் ஏராளமாகக் கூடிவிடுவார்கள். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடிகோலிய ராபர்ட் க்ளைவ், இந்தத் தெப்பக்குளத்துக்கு அருகில்தான் குடியிருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் அமைக்கப்படுவதற்கு இந்தக் கோட்டை பெரும் பங்காற்றியிருக்கிறது.

கொடும்பாளூர்

திருச்சி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. திருச்சியிலிருந்து 42 கி.மீ தூரத்தில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடம் என்பதால், தேவையான போக்குவரத்து வசதி உள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வேளிர்கள் கட்டிய மூவர் கோயில், கொடும்பாளூருக்குச் சிறப்பு சேர்க்கிறது. மூன்று கோயில்களில் தற்போது இரண்டு மட்டுமே இருக்கின்றன.

புளியஞ்சோலை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் எல்லைக்குள் வரும் புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி, மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. கொல்லிமலை அடிவாரத்தில் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி, திருச்சியிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அடர்த்தியான, பசுமையான காடுகளால் சூழப்பட்டதால், புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி மனதில் எழுச்சியை ஏற்படுத்தும்.

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு

சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டும்தான் பிரபலம். இப்போது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், திருச்சிக்கு அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆடிப்பெருக்கு

காவிரி வளம்கொழிக்கும் திருச்சி மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமணமான புதுமணத் தம்பதிகள், திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளும் இளம் பெண்கள், காவிரிக் கரையில் ஆடிப்பெருக்கின்போது நீராடினால் நல்லது என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கின்போது திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரிக்கரை களைகட்டும்.

 

3

Leave A Reply

Your email address will not be published.