விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் திருச்சி

0
D1

அண்ணா ஸ்டேடியம் :

திருச்சியில் இருக்கும் அண்ணா ஸ்டேடியம், திருச்சியின் முக்கியமான விளையாட்டு மைதானம். ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், அத்லெட்டிக் டிராக், பேட்மின்டன் கோர்ட், நீச்சல் குளம் உள்ளிட்டவை இந்த ஸ்டேடியத்தில் இருக்கின்றன. உள் அரங்க விளையாட்டுகளும் விளையாடலாம். இங்கேயே அத்லெட்டிக் வீரர்களுக்கான விடுதியும் செயல்படுகிறது.

கிரிக்கெட் அசோசியேஷன்

D2

திருச்சியில் செயல்படும் திருச்சி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனோடு சேர்ந்து செயல்படும் இந்த கிளப், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிரிக்கெட் போட்டிகளை ஒருங்கிணைத்து, இளம் வீரர்களை அடையாளப்படுத்துகிறது. முதல் தரமான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்துகிறது.

மன்னார்புரம் அகாடமி

N2

திருச்சிராப்பள்ளி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன், 2008-2009ஆம் ஆண்டு, தனது பொன்விழாவைக் கொண்டாடியது. திருச்சி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அசோசியேஷன், நகரின் வேறு சில இடங்களிலும் கிரிக்கெட் பயிற்சி அகாடமியை நிறுவியது. அப்படி திருச்சியின் புறநகரில் ஆரம்பிக்கப்பட்ட மன்னார்புரம் அகாடமி, சிறப்பாக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறது.

மற்ற விளையாட்டுகள்

:
திருச்சி மாவட்ட அளவில் கால்பந்து, டென்னிஸ், வாலிபால் போன்ற விளையாட்டுகளுக்கு தனித்தனியாகப் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. விளையாட்டுக் குழுக்களும் நிறைய செயல்படுகின்றன. அவ்வப்போது தேசிய அளவிலான போட்டிகளையும் நடத்துகின்றன.

வாக்கி-ஹாக்கி

திருச்சி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி விளையாட்டும், கிரிக்கெட் ஆட்டமும் இரண்டு கண்கள் மாதிரி. நிறைய ஹாக்கி வீரர்களை உருவாக்கியிருக்கிறது திருச்சி மாவட்டம். ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கி போட்டிக்காக ‘மும்பை இந்தியன்’ அணியில் விளையாடிய சார்லஸ் கார்னிலியஸ், லெஸ்லி பெர்னாண்டஸ், ராஜகோபால் சதீஷ் ஆகிய மூன்று பேரும் திருச்சி மாவட்டத்துக்காரர்கள்.

N3

Leave A Reply

Your email address will not be published.